சமந்தாவை அலேக்கா தூக்கி சுழட்டிய அக்சய் குமார் – வீடியோவை கண்டு புலம்பும் ரசிகர்கள்.

0
492
samantha
- Advertisement -

பிரபல நிகழ்ச்சியில் சமந்தாவை, அக்ஷய்குமார் கையால் தூக்கில் சென்று இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாகவும், முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

சமீப காலமாகவே சமந்தா அவர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனிடையே இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து இருந்தார். பின் இருவரும் தென்னிந்திய சினிமா உலகில் மிக சிறந்த ஜோடிகளாக வருவார்கள் உலகில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா -நாகா சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க : விமர்சனம் செய்ய இத்தனை லட்சம் கேட்ட ப்ளூ சட்டை மாறன் – பார்த்திபன் வெளியிட்ட திடீர் ஆடியோ.

சமந்தா-நாக சைதன்யா பிரிவு:

இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. ஆனால், இருவரும் விவாகரத்து குறித்த காரணத்தை தெரிவிக்கவே இல்லை. இருந்தாலும், இவர்கள் இருவரும் பிரிவிற்கு பிறகு தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சமந்தா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

சமந்தா நடித்த படங்கள்:

சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் ஊ சொல்றியா என்ற பாடலுக்கு சமந்தா செம்ம குத்தாட்டம் போட்டிருந்தார். அதனை தொடர்ந்து விஜய் தேவர்கொண்டா நடிக்கும் படத்திலும் குத்தாட்டம் போட இருக்கிறார். பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் சமந்தா நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் சமந்தாவுக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்து இருக்கிறது.

சமந்தா நடிக்கும் படங்கள்:

இதனை தொடர்ந்து இவர் சாகுந்தலம், யசோதா, திரில்லர் கதை சமந்தா கொண்ட படம், ஹாலிவுட் படம், குஷி போன்ற பல படத்தில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தாவை, அக்ஷய்குமார் தூக்கி செல்லும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, விஜய் டிவியில் காபி வித் டிடி நிகழ்ச்சி எப்படி பிரபலமோ அதே போல் இந்தியில் இயக்குனர் காபி வித் கரன் நடத்தும் நிகழ்ச்சியும் ஃபேமஸ். இந்த நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

சமந்தாவை தூக்கிய அக்ஷய் குமார் :

தற்போது இந்த நிகழ்ச்சியில் 7வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடிகர் அக்ஷய் குமார் மற்றும் சமந்தா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தனர். மேலும், இந்த நிகழ்ச்சியின் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் நிகழ்ச்சி அரங்குக்கு சமந்தாவும், அக்ஷய்குமாரும் நுழைகின்றனர். அப்போது சமந்தாவை அக்ஷய் குமார் தன் கையில் தூக்கியபடி நுழைகிறார். பின் நிகழ்ச்சியில் சமந்தா, மகிழ்ச்சியற்ற திருமணங்களுக்கு நீங்கள் தான் காரணம் என குற்றம் சாட்டி இருக்கிறார். அதற்கு கரண் அதிர்ச்சி ஆகுகிறார். தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement