லியோ படத்துல நடிக்க ஆரம்பிச்சதில் இருந்தே – திரிஷா விவகாரம் குறித்து விளக்கமளித்த மன்சூர் அலிகான்.

0
512
Mansooralikhan
- Advertisement -

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மன்சூர் அலிகான், இந்த படத்தில் நடித்த திரிஷா குறித்து பேசும் போது ‘இப்போதெல்லாம் பலாத்கார காட்சிகளை வைப்பது இல்லை. நானும் திரிஷா இருக்கிறார்.. லியோவில் அவரை கட்டிலில் தூக்கி போடலாம்.. அப்படி ஒரு காட்சி இருக்கும் என்றெல்லாம் நினைத்தேன். குஷ்பு.. ரோஜாவை எல்லாம் அப்படி செய்துள்ளேன். ஆனால் இங்கே அப்படி காட்சி இல்லை.

-விளம்பரம்-

எனக்கு வில்லன் ரோல் கொடுப்பது இல்லாது. இப்போதெல்லாம் பலாத்கார காட்சிகளை வைப்பது இல்லை என்று ‘ என்று கூறி இருந்தார். மன்சூர் அலிகானின் இந்த பேச்சால் கடுப்பான திரிஷா ‘நடிகர் மன்சூர் அலிகான் என்னைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோவைப் பார்த்தேன். அவரது பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. அந்த பேச்சு ஆணாதிக்க மனநிலையிலும், மரியாதைக் குறைவானதாகவும், பாலின பாகுபாட்டைப் பிரதிபலிக்கக் கூடிய மோசமான ஒன்றாகவும் இருந்தது.

- Advertisement -

என்னுடன் நடிக்க வேண்டும் என அவர் தொடர்ந்து ஆசைப்படட்டும். ஆனால், இத்தகைய கேவலமான மனிதருடன் இணைந்து நடிக்காததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய வாழ்நாளில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்பது உறுதி. அவரைப் போன்றவர்களால் ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கே இழுக்கு’ என்று படு ஆவேசமாக பதிவிட்டு இருக்கிறார். மன்சூர் அலிகானின் இந்த பேச்சுக்கு பல்வேறு பிரபலங்கள் தங்கள் கண்டனத்தை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையமானது நடிகர் மன்சூர் அலிகான் மீது தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. சட்டப்பிரிவு 509 மற்றும் இது தொடர்பான இதர பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள மன்சூர் அலிகான். திரிஷா என்ற ஒரு நடிகை அவர் ஒரு சினிமா கலைஞர் நானும் ஒரு சினிமா கலைஞர் ஒரு நடிகராக நான் நடித்த படங்கள் குறித்து எல்லாம் பேசியபோது பேசிய விஷயங்கள் தான் அவை.

-விளம்பரம்-

ஆனால் அதை கட் செய்து போட்டிருக்கிறார்கள். நான் 16 கதாநாயகிகளை வைத்து படம் எடுத்திருக்கிறேன் என்னுடைய நகம் கூட அவர்கள் மீது பட்டது கிடையாது அப்படித்தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ரோஜா குஷ்பூ த்ரிஷா என்று அனைவர் பற்றியும் ஒரு நடிகை என்ற முறையில் தான் பேசினேன் ஒரு தனிநபரை இப்படி யாராவது பேச முடியுமா. அந்த முழு வீடியோவை பார்த்தால் த்ரிஷாவோ லோகேஷ் கனகராஜ் இப்படி பேச மாட்டார்கள்.

அந்த கட் செய்யப்பட்ட வீடியோவை பார்த்தால் எனக்கு அய்யோ என்னடா இது என்பது போல தவறாகத்தான் தோன்றுகிறது. என்னை அரசியல் ரீதியாக பழி வாங்குகிறார்கள். ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும் போது எல்லாம் என்னை இப்படி செய்வார்கள். இன்னும் பத்து நாளில் என்னுடைய படம் ஒன்றை வெளியிடுகிறேன் அதற்குள் இப்படி எல்லாம் செய்தால் நான் என்ன செய்வது.

இந்த விவகாரத்தில் நடிகர் சங்கம் கூட என்ன நடந்தது என்ற விளக்கத்தை என்னிடம் கேட்கவில்லை. நாட்டில் எவ்வளவு பிரச்சனை இருக்கும் போது என்னை அரசியல் ரீதியாக ஒழிக்க இப்படியெல்லாம் செய்கிறார்கள். திரிஷா என்னுடன் இனி மன்னிக்க மாட்டேன் என்று சொல்வதை கேட்டு கஷ்டமாகத்தான் இருக்கிறது. அந்த வீடியோவை பார்த்து அவர் தவறாக புரிந்து கொண்டதால் என்னை அப்படி பேசி இருக்கிறார்.

எப்படி உதயநிதி தம்பியை சமாதானத்தை பற்றி பேசியதை வைத்து நாட்டிய உண்டாக்க பார்த்தார்களோ அதே போல என்னை இப்படி செய்கிறார்கள். லியோ படம் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து எனக்கு ஒரே பிரச்சனை தான். இந்தப் படத்தில் நான் நடிக்காமலே இருந்திருக்கலாம் நடித்துவிட்டு எனக்கு எவ்வளவு பிரச்சனை. அதேபோல இந்த சம்பவத்திற்கு பின்னர் நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தோன்றவில்லை. நான் தவறு செய்திருந்தால் தானே மன்னிப்பு கேட்கணும், நான் என்ன மன்னிப்பு கேட்கிற ஜாதியா, இல்லை மன்னிப்பு கேட்குற மனுஷனா என்று கூறியுள்ளார்.

Advertisement