விஜய் டிவி ரக்ஷன் நாயகனாக நடித்துள்ள’மறக்குமா நெஞ்சம்’ எப்படி? முழு விமர்சனம் இதோ.

0
543
- Advertisement -

விஜய் டிவி ரக்ஷன் ஹீரோவாக நடித்திருக்கும் மறக்குமா நெஞ்சம் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை ராகோ. யோகேந்திரன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ரக்ஷன், தீனா, ஸ்வேதா வேணுகோபால், மலினா, மெல்வின் டென்னிஸ், முனிஷ்காந்த் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். சச்சின் வாரியர் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கோபி துரைசாமி, ராஜேஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ரக்சன், தீனா, ஸ்வேதா ஆகியோர் பள்ளி படிக்கும் போது இருந்தே நண்பர்களாக இருக்கிறார்கள். பின் இவர்கள் பள்ளி பருவத்தை முடித்து விடுகிறார்கள். இப்படி இருக்கும்போது 2018 ஆம் ஆண்டு நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. அதில் இவர்கள் 2008 ஆம் ஆண்டு பள்ளியில் எழுதிய பரிட்சையில் 100% தேர்ச்சியை கொடுக்க மோசடி செய்திருக்கிறார்கள். இதனால் அடுத்த ஆண்டு படித்த மாணவர்கள் அனைவரும் மூன்று மாதங்கள் மீண்டும் பள்ளிக்கு வந்து படித்து தேர்வு எழுத வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள்.

- Advertisement -

இதனால் மாணவர்கள் அனைவரும் மீண்டும் பள்ளிக்கு வருகிறார்கள். அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் ரக்சன், தீனா இருவரின் காமெடியும் நன்றாக இருக்கிறது. குறிப்பாக, தீனா உடைய நகைச்சுவை எல்லாம் கைத்தட்டல்களை வாங்கி இருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க இளைஞர்களை மையப்படுத்திய கதை. பள்ளி கால நினைவுகளை மீண்டும் நினைவூட்டி இருக்கிறது என்று சொல்லலாம்.

இவர்களுடன் முனீஸ்காந்தினுடைய காமெடியும் நன்றாக இருக்கிறது. இவர்களை அடுத்து ஸ்வேதா வேணுகோபால், மதீனா ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்தார்கள். ஆனால், சில இடங்களில் இந்த படம் பிரேமம் படத்தை ஞாபகப்படுத்தி இருக்கிறது என்று சொல்லலாம். பாடல்கள் நன்றாக இருந்தாலும் பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்து இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், அனைவருமே தங்களுடைய கதாபாத்திரத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி செலுத்தி இருக்கலாம். ரக்சன் இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியிருந்தால் அவருடைய திரை பயணத்திற்கு சிறப்பாக அமைந்திருக்கும். இவரை விட தீனா தான் நிறைய இடங்களில் பார்வையாளர்கள் மத்தியில் ஈர்க்கப்பட்டு இருக்கிறார். இரண்டாம் பாதியில் தேவையில்லாத நிறைய காட்சிகள் வந்து செல்கின்றது. சில குறைகளையும், எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்று சேர்ந்தால் இந்த படம் ஓகேவாக இருக்கும்.

நிறை:

தீனாவின் நடிப்பு சிறப்பு

பின்னணி பாடல்கள் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது

கதைக்களம் ஓகே

முழுக்க முழுக்க இளைஞர்களை மையப்படுத்திய கதை

பள்ளி பருவத்தை நினைவூட்டி இருக்கிறது

குறை:

இரண்டாம் பாதி சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது

ரக்ஷின் நடிப்பு

இயக்குனர் கலைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்

நிறைய இடங்களில் பிரேமம் படம் நினைவூட்டி இருக்கிறது

நடிகர்களின் நடிப்பு சொதப்பல்

பின்னணி இசை செட்டாகவில்லை

மொத்தத்தில் மறக்குமா நெஞ்சம்-மலரும் நினைவுகள்

Advertisement