இளையராஜா பயோபிக் படத்தை முதலில் இயக்க இருந்தது மாரி செல்வராஜ், மறுத்த இளையராஜா-காரணம் இது தான்

0
626
- Advertisement -

தன்னுடைய வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்க பிரபல இயக்குனருக்கு இளையராஜா மறுப்பு தெரிவித்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. 80ஸ் காலகட்டம் துவங்கி தற்போது வரை இவர் இசையை விரும்பாத ரசிகர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

-விளம்பரம்-

அதோடு இவரது இசைக்காகவே ஓடிய படங்கள் பல உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் இளையராஜாவின் பயோபிக் படம் உருவாக இருப்பதாக கடந்த ஆண்டு தகவல் வெளியாகி இருந்தது. இதில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார். காரணம், தனுஷின் முகம் இளையராஜாவின் முகம் போலவே இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் தனுஷ் இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் பயோபிக்கில் நடிக்க தனுஷ் சரியாக இருப்பார் என்று தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

- Advertisement -

இளையராஜா பயோபிக் படம்:

மேலும், இளையராஜா பயோபிக் படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தான் இயக்குகிறார். இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பும் உற்சாகமும் ஏற்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கம், சோசியல் மீடியாவில் பலவிதமான சர்ச்சைகள் வந்த வண்ணம் இருக்கிறது. அதில், அந்த காலகட்டத்தில் இளையராஜாவுடன் நட்பாக பழகிய பல இயக்குனர்கள், நடிகர்கள், பாடகர்கள் என பல பேர் இந்த படத்தில் வருவார்களா? கமலஹாசன், ரஜினி, வைரமுத்து, ஏ ஆர் ரகுமான் கதாபாத்திரங்களும் இந்த படத்தில் இடம்பெருமா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

படம் குறித்த தகவல்:

அதோடு அருண் மாதேஸ்வரனை விமர்சித்தும் கிண்டல் செய்தும் வருகிறார்கள். இவர் இயக்கிய மூன்று படங்களுமே கலவரமாக இருந்தது. இவர் எப்படி பயோபிக் படத்தை எடுப்பார்? என்று கேட்கிறார்கள். இந்தப் படத்தை இளையராஜா நேரடியாக தன்னுடைய பாவலர் கிரியேஷன் மூலம் தயாரிக்கவில்லை. பி ஏ ஸ்ரீராம் பக்திசரண் மூலமாகத்தான் தயாரிக்கிறார். இவர்களுடன் இன்னும் இரு தயாரிப்பு நிறுவனங்களும் இந்த படத்தில் இணைந்து இருக்கிறார்கள். மேலும், இந்த படத்தில் தனுஷ் உடன் எந்தெந்த முன்னணி நடிகர்கள் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்ற விவரம் கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

மாரி செல்வராஜ் நிராகரித்த காரணம்:

இந்த நிலையில் இளையராஜாவின் படத்தை இயக்குவதற்கு முதலில் இயக்குனர்கள் குறித்த தேடல் நடைபெற்றது. அதில் மாரி செல்வராஜின் பெயரை தனுஷ் கூறியிருந்தார். இதைக் கேட்டவுடன் இளையராஜா நானும் மாரி செல்வராஜ் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் இருவரும் ஒரே படத்தில் பணி புரிந்திருக்கிறார்கள் என்ற பெயர் வந்து விடக்கூடாது. அதனால் அவர் வேண்டாம் என்று இளையராஜா கூறியிருக்கிறார். இதை பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் பேட்டியில் கூறியிருந்தார்.

அருண் மாதேஸ்வரன் குறித்த தகவல்:

அதற்குப் பிறகுதான் இவர் அருண் மாதேஸ்வரனை கமிட் செய்திருக்கிறார்கள். கடைசியாக, அருண் மாதேஸ்வரன் அவர்கள் தனுஷை வைத்து கேப்டன் மில்லர் என்ற படத்தை எடுத்திருந்தார். சில மாதங்களுக்கு முன்புதான் இந்த படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த படம் வெளிவந்த பிறகு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்லணும். பலரும் அருண் மாதேஸ்வரனை திட்டியும் விமர்சித்தும் இருந்தார்கள். தற்போது இவர் இளையராஜா பயோபிக் படத்தை எடுக்கப் போகிறார். இந்த படத்தின் மூலம் அருண் மாதேஸ்வரர் தன்னுடைய திறமையை நிரூபிப்பார் என்று ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

Advertisement