பாட்டுக்கே ராயல்டி, Biopicக்கு சும்மா விடுவாரா? தன் சுயசரிதை படத்திற்கு இளையராஜா போட்ட பிளான்.

0
565
- Advertisement -

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படம் குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. 80ஸ் காலகட்டம் துவங்கி தற்போது வரை இவர் இசையை விரும்பாத ரசிகர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதோடு இவரது இசைக்காகவே ஓடிய படங்கள் பல உள்ளது.

-விளம்பரம்-

இப்படி இருக்கும் நிலையில் இளையராஜாவின் பயோபிக் படம் உருவாக இருப்பதாக கடந்த ஆண்டு தகவல் வெளியாகி இருந்தது. இதில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார். காரணம், தனுஷின் முகம் இளையராஜாவின் முகம் போலவே இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் தனுஷ் இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் பயோபிக்கில் நடிக்க தனுஷ் சரியாக இருப்பார்.

- Advertisement -

இளையராஜா பயோபிக் படம்:

இளையராஜா பயோபிக் படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தான் இயக்கப் போவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பும் உற்சாகமும் ஏற்பட்டிருக்கிறது. மேலும், இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று கதையை படமாக எடுக்க போகிறார்கள் என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து சோசியல் மீடியாவில் பலவிதமான சர்ச்சைகள் வந்த வண்ணம் இருக்கிறது.

படம் குறித்த சர்ச்சை:

அதில், அந்த காலகட்டத்தில் இளையராஜாவுடன் நட்பாக பழகிய பல இயக்குனர்கள், நடிகர்கள், பாடகர்கள் என பல பேர் இந்த படத்தில் வருவார்களா? கமலஹாசன், ரஜினி, வைரமுத்து, ஏ ஆர் ரகுமான் கதாபாத்திரங்களும் இந்த படத்தில் இடம்பெருமா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இன்னொரு பக்கம் அருண் மாதேஸ்வரனை விமர்சித்தும் கிண்டல் செய்தும் வருகிறார்கள். இவர் இயக்கிய மூன்று படங்களுமே கலவரமாக இருந்தது. இவர் எப்படி பயோபிக் படத்தை எடுப்பார்? என்று கேட்கிறார்கள். பொதுவாகவே இளையராஜா தன்னுடைய பாடலையும் இசையும் யாராவது அனுமதி இல்லாமல் பயன்படுத்தினார் ராயல்டி கேட்டு வழக்கு போடுவார்.

-விளம்பரம்-

இளையராஜா மீதான சர்ச்சை:

சமீப காலமாகவே இளையராஜா குறித்த சர்ச்சை இணையத்தில் வைரல் ஆகி தான் வருகிறது. இதனால் பலரும் இளையராஜாவை சங்கி என்று விமர்சித்து வருகிறார்கள். எஸ் பி பாலசுப்ரமணியம் கச்சேரிகளில் தன்னுடைய இசையை பயன்படுத்தக் கூடாது என்று இலையுணராஜா கூறி இருந்தார். இளையராஜாவை தவிர வேறு யாரும் இந்த படத்திற்கு மியூசிக் போட முடியாது. அப்படி போட்டால் அந்த மியூசிக் இயக்குனர் மீது இளையராஜா கேஸ் போடுவார் என்றெல்லாம் சொல்லுவார்கள். இப்படி இருக்கும் நிலையில் பயோபிக் பயோபிக் எடுப்பதன் மூலம் இளையராஜாவிற்கு வர போகும் லாபம் குறித்த தகவல் தான் தற்போது ஹாட் டாப்பியாக சென்று கொண்டு இருக்கின்றது.

இளையராஜாவுக்கு கிடைக்கும் லாபம்:

இந்தப் படத்தை இளையராஜா நேரடியாக தன்னுடைய பாவலர் கிரியேஷன் மூலம் தயாரிக்கவில்லை. பி ஏ ஸ்ரீராம் பக்திசரண் மூலமாகத்தான் தயாரிக்கிறார். இவர்களுடன் இன்னும் இரு தயாரிப்பு நிறுவனங்களும் இந்த படத்தில் இணைந்து இருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் தலா முப்பது, முப்பது சதவீதம் லாபமும், இளையராஜாவுக்கு 40 சதவீதம் லாபமும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இளையராஜாவே இசை அமைப்பதால் அதற்கான சம்பளமாக ஒரு பெரிய தொகையும் கொடுப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் தனுஷ் உடன் எந்தெந்த முன்னணி நடிகர்கள் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement