இப்படி செய்து இருந்தா மாரிமுத்துவ காப்பாத்தி இருந்திருக்கலாம் – சிகிச்சை அளித்த மருத்துவர் விளக்கம்.

0
1010
Marimuthu
- Advertisement -

மாரிமுத்துவின் இறப்பிற்கான காரணம் குறித்து மருத்துவர் பேசியிருக்கும் வீடியோவைரலாகி வரும் நிலையில் மாரடைப்பிற்கு முன்னர் டப்பிங் ஸ்டுடியோவில் இருந்து வெளியில் வந்து மாரிமுத்து தானே கார் ஓட்டிச் செல்லும் காட்சிகளும் வெளியாகி இருக்கிறது. ன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் தொடரில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் மாரிமுத்து. இவர் இயக்குனர்கள் ராஜ்கிரண், வசந்த், எஸ்.ஜே சூர்யா போன்ற பல இயக்குனர்களிடமும் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், பல படங்களில் குணச்சித்ர நடிகராகவும் வில்லனாகவும் நடித்துள்ளார். இறுதியாக ரஜினியின் ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் மாரிமுத்து நேற்று மாரடைப்பு காரணமாக திடீர் மரணமடைந்தார். எதிர் நீச்சல் தொடரின் டப்பிங் பணியில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் போது மாரிமுத்துவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவரே காரை ஓட்டி சென்று மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். ஆனால், சிகிச்சை பலனின்றி காலமாகி இருக்கிறார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் மாரிமுத்துவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அளித்துள்ள பேட்டியில் காலை ஒரு 8.15 மணி அளவில் படப்பிடிப்பில் இருந்து நேராக மருத்துவமனைக்கு வந்தார் கார் பார்க்கிங்கில் அவர் இறங்கும் போது அவரால் இறங்க முடியவில்லை உடல் முழுவதும் வேர்த்து, மூச்சி திணறி நெஞ்சை பிடிதுக் கொண்டு வந்துள்ளார். உடனே எங்களுடைய ஊழியர்கள் பார்த்து அவரை அழைத்து வருவதற்குள் அவர்கள் மீது அப்படியே சாய்ந்து விட்டார்.

பின்னர் அவரை சோதிக்கும் போதே அவரால் மூச்சு விட முடியவில்லை நாடித்துடிப்புகளும் மிகவும் குறைவாக இருந்தது உடனே நாங்கள் CPR செய்தோம். மேற்கொண்டு அனைத்து சிகிச்சைகளையும் கொடுத்தோம். அப்போதும் அவருக்கு pulse bp சரியாகவில்லை என்பதால் ஷாக்கும் கொடுத்தோம். வாயிலிருந்து நுரை வந்துவிட்டது. அதனால் எங்களால் காப்பாற்ற முடியவில்லை அவருடைய மருத்துவ ரெக்கார்டுகள் மூலம் பார்த்த போது அவருக்கு 2 Stems போட்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும் அவருக்கு சர்க்கரை நோயும் இருக்கிறது அவர் மாத்திரைகளையும் உட்கொண்டு வந்திருக்கிறார். அதிக ஸ்ரைன் செய்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருந்திருக்கலாம். மாரடைப்பு வந்தால் நடந்து வேகமாக வருவதோ கார் ஓட்டி வருவதோ இதை எல்லாம் செய்யக்கூடாது அது மேலும் இதயத்திற்கு ஸ்ரைன் கொடுக்கும். அதுபோன்ற சமயத்தில் ஒரு 108 ஆம்புலன்ஸ் கால் செய்தால் கூட உடனே வந்து விடுவார்கள்.

இதை செய்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் :

மாரிமுத்து விஷயத்தில் அவர் கார் ஓட்டி வந்ததற்கு பதிலாக வேறு யாராவது அவரை அழைத்து வந்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என்று கூறி இருக்கிறார் இது ஒருபுறம் இருக்க மாரிமுத்து மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பாக டப்பிங் ஸ்டுடியோவில் இருந்து வெளியில் வந்து வலியுடன் காரில் ஏறிச்சென்று மருத்துவமனைக்குச் செல்லும் வீடியோவும் வெளியாகி இருக்கிறது

Advertisement