“மூளை இல்லாமல் இந்த திரைபடத்தை பார்த்தால் படம் நன்றாக இருக்கும்” – ப்ளு சட்டை மாறன்.

0
1704
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஷால். தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மார்க் ஆண்டனி. இந்த படத்தை வினோத் குமார் தயாரித்திருக்கிறார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, அபிநயா, ரிது வர்மா, செல்வராகவன், நிழல்கள் ரவி, Y.G. மகேந்திரன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார். மேலும், பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று இந்த திரைப்படம் வெளியானது. அதற்க்கு தற்போது ப்ளூ சட்டை மாறன் படத்தை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் செல்வராகவன் டைம் டிராவல் செய்யும் கருவியை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். பல வருடங்களாக இதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். பின் 1975 இல் போன் மூலம் டைம் ட்ராவல் செய்யும் கருவியை செல்வராகவன் கண்டுபிடிக்கிறார். பின் இந்த டைம் ட்ராவல் கருவியை பயன்படுத்தி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் எல்லாத்தையும் செல்வராகவன் மாற்றுகிறார். அப்படி அவர் செய்யும் போது தான் அவர் இறந்து விடுகிறார்.

- Advertisement -

படத்தின் கதை:

பின் 20 ஆண்டுகளுக்கு பிறகு 1995இல் டைம் டிராவல் போன் விஷால் உடைய மகனுக்கு கிடைக்கிறது. இதை வைத்து அவர் தன்னுடைய தந்தை ஆன்டனியால் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான விஷயங்களை மாற்ற நினைக்கிறார். அதன் பின் என்ன நடந்தது? இதில் எஸ் ஜே சூர்யா வின் பங்கு என்ன? விஷால் நினைத்ததை வெற்றி பெற்றாரா? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படத்தில் விஷால் அப்பா மற்றும் மகன் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

ப்ளூ சட்டை மாறன் ரீவியூ:

இது ஒரு டைம் ட்ராவல் கதை என்பதால் அதை வைத்து ஆராய்ச்சி செய்யாமல் அதை குழப்பமாக இல்லாமல் ஒரே நேர்கோட்டில் எடுத்து சென்றனர். இந்த கதை என்று பார்த்தால் இது பிரம்மாண்டமான கதை எல்லாம் கிடையாது. இது ஒரு சுமாரான இதுதான் இது கொஞ்சம் சிக்கல் பிடித்த கதை. இந்தக் கதையை சரியான கோணத்தில் கையாளாமல் இருந்திருந்தால் இது பெரிய குழப்பமாக அமைந்திருக்கும். ஆனால் இந்த திரைப்படத்தை எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் சின்ன சின்ன ட்விஸ்ட்களை வைத்து படத்தின் கதையை அழகாக நகற்றி இருந்தனர்.

-விளம்பரம்-

திரைப்படம் ஆரம்பத்தில் விஷாலுக்கான திரைப்படம் ஆக இருந்தாலும் அதன் பின் இந்த கதை எஸ் ஜே சூர்யாவிற்கான கதையாக மாறியதால் விறுவிறுப்பாக மாறியது. இந்தப் படத்துல அனைத்தும் அதிகமாக தான் இருக்கும் நடிப்பு, வசனம், வசனம் பேசும் காட்சிகள், இசை அனைத்தும் அதிகமாக இருப்பது போல் தான் இருக்கும். படம் சில இடங்களில் பொறுமையாக சென்றாலும் படம் முழுவதும் நன்றாக அமைந்ததற்கு ஜிவி பிரகாஷ் இசையும் ஒரு காரணம். இந்த படம் ஒரு சிறந்த பொழுதுபோக்கிற்கான திரைப்படம். எந்த ஒரு லாஜிக் குறைபாடுகளை பார்க்காமல் சென்ற அந்த திரைப்படம் நன்றாக தானே இருக்கும். இந்த திரைப்படத்தை பார்த்த பின் அனைவரும் எஸ் ஜே சூர்யாவை பாராட்டுவார்கள்.

Advertisement