ஒருமையில் பேசுவதா? மிஷ்கினுக்கு கண்ணீர் போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்- பின்னணி இது தான்

0
1394
- Advertisement -

மிஸ்கினை கண்டித்து விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வரும் பதிவு தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு. இந்த படத்தை வம்சி இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். இந்த படம் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு வெளியாகி இருந்தது. வாரிசு படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார்.

- Advertisement -

லியோ படம்:

இதற்கு முன் லோகேஷ் அவர்கள் விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி இருந்தார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், சஞ்சய் மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

படம் குறித்த தகவல்:

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. அதோடு இந்த படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலம். ஆனால், இந்த பாடல் போதைப் பொருளை ஊக்குவிக்கும் வகையிலும், புகைபிடிக்கும் காட்சிகளிலும் விஜய் நடித்திருக்கிறார். இதனால் பாடலில் இருந்து சில வரிகள் நீக்கப்பட வேண்டும் என்று பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது.

-விளம்பரம்-

மிஸ்கின் அளித்த பேட்டி:

இந்த நிலையில் லியோ பட நடிகர் மிஷ்கினை விஜய் ரசிகர்கள் திட்டி வரும் பதிவு தான் வைரலாகி வருகிறது. அதாவது, லியோ படத்தில் மிஸ்கின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் இந்த படம் தொடர்பாக சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர், லியோ படம் நன்றாக வந்திருக்கிறது. தம்பி விஜயும் படத்தை பார்த்துள்ளான். படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று பாராட்டினான். படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று கூடியிருந்தார். இதை பார்த்த விஜய் ரசிகர்கள், விஜயை ஏன் ஒருமையில் பேசுகிறீர்கள்? என்று கண்டித்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

விஜய் ரசிகர்கள் கண்டனம்:

அது மட்டும் இல்லாமல் கோபத்தில் விஜய் ரசிகர்கள், மிஸ்கின் இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் எல்லாம் சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார்கள். அதிலும் சிலர், தளபதியை இன்னும் அவன் இவன் என்று பேசுவதா? அப்படி சொல்லிக் கூப்பிடும் லெவெலில் அவர் இல்லை. பொது இடத்தில் பேசும் போது மரியாதையாக பேசுங்கள். தளபதி வருங்கால முதலமைச்சர். அதனால் மரியாதை கொடுத்து பேசுங்கள் என்றெல்லாம் கூறி வருகிறார்கள்.

Advertisement