ரொமான்டி ரோபோ காதல் கதை- My3 வெப் சீரிஸ் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

0
1921
- Advertisement -

இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வெப் சீரிஸ் தான் எம்ஒய் 3. இவர் ஏற்கனவே சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, நண்பேண்டா, மிஸ்டர் லோக்கல் போன்ற படங்களை இயக்கியிருந்தார். இந்த படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை தான் பெற்றிருந்தது. இதனை எடுத்து தற்போது இவர் ஜெயம் ரவியை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். இதற்கிடையில் தற்போது இவருடைய இயக்கத்தில் வெளியாகி இருக்கும் வெப் சீரிஸ் தான் எம் ஒய்3. இது கொரியன் வெப் சீரிஸின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இதில் அன்சிகா, முகேன் , சாந்தனு, அபிஷேக், ஜனனி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு கணேசன் இசை அமைத்திருக்கிறார். இன்று முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கும் இந்த வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் பிக் பாஸ் முகேன் மிகப்பெரிய பணக்காரராக இருக்கிறார். இவர் ஆதித்யா டி எஸ்டேட், ஆதித்யா குரூப் ஆஃப் கம்பெனியின் ஒரே ஓனர். ஆனால், சிறு வயதிலேயே அவருடைய பெற்றோர்கள் கார் விபத்தினால் இறந்து விடுகிறார்கள். அந்த விபத்தில் இருந்து முகேன் மட்டும் தப்பித்து விடுகிறார். அது மட்டும் இல்லாமல் அந்த விபத்திலிருந்து தப்பித்த முகேன் யாராவது தொட்டுவிட்டால் போதும் அவருடைய உடம்பு முழுக்க அலர்ஜி ஏற்படும்.

- Advertisement -

படத்தின் கதை:

ஒரு புது விதமான நோய் இந்த விபத்தினால் இவருக்கு ஏற்படுகிறது. இதன் காரணமாகவே பள்ளி, கல்லூரி என்று எதுவும் சென்று படிக்காமல் அனைத்தையும் ஆன்லைன் மூலமாகவே கற்றுக் கொள்கிறார் முகேன். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய கம்பெனியையும் ஜூம் கால் மீட்டிங் வழியாக தான் நடத்தி வருகிறார். இன்னொரு பக்கம் நடிகர் சாந்தனு சயின்டிஸ்ட் ஆக இருக்கிறார். அவர் கண்டுபிடிக்கும் எம்ஒய் ரோபோ தான் நடிகை ஹன்சிகா. இவருடைய காதலியாக ஹன்சிகா நடித்திருக்கிறார்.

காதலியை பிரிந்த வருத்தத்தில் இவர் ஒரு ரோபோவை உருவாக்கினார். அது அப்படியே அன்சிகா மாதிரி உருவாக்கி இருக்கிறார். மனிதர்கள் தொட்டாலே அலர்ஜி ஏற்படும் இந்த ரோபோவை சாந்தனு புதுவித நோயைக் கொண்டிருக்கும் முகேனுக்கு விற்கு நினைக்கிறார். ஆனால், திடீரென்று அவர் தயாரித்து வைத்த ரோபோ பழுதடைந்து விடுகிறது. பின் அந்த ரோபோவிற்கு பதிலாக தன்னுடைய முன்னாள் காதலி ஹன்சிகாவை முகேனிடம் அனுப்பி வைக்கிறார்.

-விளம்பரம்-

அதற்கு பிறகு ரோபோவாக நடிக்க சென்ற ஹன்சிகாவுக்கு என்ன நடந்தது? இதை எல்லாம் முகேன் கண்டுபிடித்தாரா? உண்மையான ரோபோ சரியானதா? அன்சிகா முகேனை எப்படி எல்லாம் சமாளிக்கிறார்? என்பதே படத்தின் மீதி கதை. ஆரம்பத்தில் முகேன் வரும் காட்சிகள் எல்லாம் ஓவர் பில்டப் ஆக இருக்கிறது. அவர் தனக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்தாலும் இயக்குனர் அதை கொண்டு சென்ற விதம் தான் சரியில்லை.

படம் குறித்த தகவல்:

ஸ்லோ மோஷன் காட்சிகள் எல்லாம் நிறைய இருக்கிறது. இவரை அடுத்து நடிகை அன்சிகா ரோபோவாக நடித்திருக்கிறார். இந்த ரோபோ காட்சிகளில் அவர் ரொம்ப ஓவராகவே தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று சொல்லலாம். இயக்குனர் ராஜேஷின் இந்த வெப் சீரிஸ் தோல்வியை தான் சந்திக்கிறது. ஒருவேளை அந்த கொரியன் வெப் சீரிஸை தமிழ் டப்பிங் செய்து போட்டிருந்தால் கூட ரசிகர்கள் மத்தியில் நிச்சயமாக வெற்றி பெற்றிருக்கும். ஆனால், அதை ரீமேக்ஸ் செய்கிறேன் என்று இயக்குனர் சொதப்பி தான் வைத்திருக்கிறார்.

ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை அனைத்து காட்சிகளையும் எதார்த்தம் இல்லாமல் ஒரு செயற்கை தனம் நிறைந்ததாகவே காண்பித்திருக்கிறார். அதோடு ரோபோவை சேதப்படுத்த வரும் ஒரு காட்சி யாராலயுமே ஜீரணிக்க முடியாது. அந்த அளவிற்கு மொக்கையாக இருக்கும். பின்னணி இசை சுமார். ஒளிப்பதிவு ஒளிப்பதிவு ஓகே. இயக்குனர் கதைக்களத்தில் நிறைவே கவனம் செலுத்தி இருக்கலாம். மொத்தத்தில் ரொம்ப ரொம்ப சுமாரான படமாக தான் எம் ஒய் 3 வெப் சீரிஸ் இருக்கிறது.

நிறை:

நடிகர்களின் நடிப்பு ஓகே

பின்னணி இசை

ஒளிப்பதிவு ஓகே

மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒன்றுமே இல்லை

குறை:

கதைக்களத்தில் இயக்குனர் இன்னும் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்

நிறைய லாஜிக் குறைபாடுகள்

ஆரம்பத்திலிருந்து இறுதிவரை கடுப்பேற்றும் அளவிற்கு காட்சிகள் சென்று கொண்டிருக்கின்றது

சுவாரஸ்யமே இல்லை.

மொத்தத்தில் எம்ஒய்3- தோல்வி

Advertisement