19 வருட சினிமா வாழ்க்கையில் இப்படி ஒரு வசூலை கண்டிராத விஷால் – 16 நாட்களில் மார்க் ஆண்டனி படம் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

0
2019
- Advertisement -

மார்க் ஆண்டனி படத்தின் வசூலால் மகிழ்சியில் இருக்கும் அவரது ரசிகர்கள் .தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகன் ஆவார். இவர் சினிமாவில் நடிகர் ஆவதற்கு முன்பே நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்து இருந்தார்.

-விளம்பரம்-

அதன் பின் இவர் ஹீரோவாக நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் லத்தி. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் மார்க் ஆண்டனி. இந்த படத்தை வினோத் மார்க் தயாரித்திருக்கிறார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, அபிநயா, ரிது வர்மா, நிழல்கள் ரவி, Y.G. மகேந்திரன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

மார்க் ஆண்டனி படம்:

இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார். படத்தில் செல்வராகவன் டைம் டிராவல் செய்யும் கருவியை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். பின் 1975 இல் போன் மூலம் டைம் ட்ராவல் செய்யும் கருவியை செல்வராகவன் கண்டுபிடிக்கிறார். இந்த டைம் ட்ராவல் கருவியை பயன்படுத்தி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் எல்லாத்தையும் செல்வராகவன் மாற்றுகிறார். அப்படி அவர் செய்யும் போது தான் அவர் இறந்து விடுகிறார்.

படத்தின் கதை:

பின் 20 ஆண்டுகளுக்கு பிறகு 1995இல் டைம் டிராவல் போன் விஷால் உடைய மகனுக்கு கிடைக்கிறது. இதை வைத்து அவர் தன்னுடைய தந்தை ஆன்டனியால் தனக்கு நடந்த கசப்பான விஷயங்களை மாற்ற நினைக்கிறார். அதன் பின் என்ன நடந்தது? இதில் எஸ் ஜே சூர்யா வின் பங்கு என்ன? விஷால் நினைத்ததை வெற்றி பெற்றாரா? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஷாலின் இந்த படம் வெற்றியைத் தந்திருக்கிறது.

-விளம்பரம்-

படத்தின் வசூல்

இரும்புத்திரை படத்திற்குப் பிறகு விஷாலின் ரசிகர்கள் கொண்டாடி வரும் திரைப்படம் என்றால் அது இந்த மார்க் ஆண்டனி திரைப்படம் தான். இதுபோன்ற வெற்றிக்குத்தான் விஷால் பல வருடங்களாக காத்துக் கொண்டிருந்தார். முதல் நாளிலிருந்து வசூலில் பட்டைய கிளப்பி வரும் இந்தத் திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருந்தார். இந்தத் திரைப்படம் வெளிவந்த 16 நாட்களை கடந்த நிலையில் இதுவரை உலக அளவில் 100 கோடி வசூலுக்கு மேல் சாதனை படைத்து வருகிறது. இதுவே விஷால் வாழ்க்கையில் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த முதல் திரைப்படம் ஆகும். இது அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement