‘ரொம்ப தன்மையான மனிதர்’ பாபா பட தயாரிப்பாளர் இறப்பு குறித்து கலங்கிய இயக்குனர்.

0
1276
- Advertisement -

தயாரிப்பாளர் வி ஏ துரை மறைவிற்கு இயக்குனர் செல்வபாரதி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 20களின் தொடக்க காலத்தில் பிதாமகன், சேது, பாபா போன்ற வெற்றி படங்களை கொடுத்த தயாரிப்பாளர் வி.ஏ.துரை. சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்தில் தயாரிப்பாளர் வி.ஏ.துரை ஏ.எம் இரத்தினத்திடம் இவர் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி பின்னர் “எவர் கீரின் இன்டர்நேஷனல்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.

-விளம்பரம்-

மேலும், இவர் ரஜினி, சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களுடன் மிகவும் நெருக்கமான ஒருவராக இருந்தார். இப்படி ஒரு காலத்தில் பிரபல தயாரிப்பாளர்க்காக இருந்த இவர் சமீபத்தில் பிரபல நோய்க்கு உள்ளாகி பார்த்துக்கொள்ள யாரும் இல்லாமல், பணமும் இல்லாமல் அவதிப்பட்டு இருந்தார். இவர் சில ஆண்டு களாகவே இவர் நீரிழிவு நோயால் காலில் ஆறாத புண் ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதிப்பட்டு இருந்தார். இவர் விருகம்பாக்கத்தில் உள்ள வீடு ஒன்றில் மிகவும் செலவுக்கு கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டு இருந்தார்.

- Advertisement -

தயாரிப்பாளர் வி ஏ துரை மறைவு:

பின் தயாரிப்பாளர் எஸ்.பி.முத்துராமன் உதவியால் எழுந்து அமரும் அளவிற்கு இவரின் உடல் தேறி இருந்தது. இருந்தாலும் இவரது காலில் நீரிழிவு நோயின் காரணமாக புண் ஆறாமல் இருந்தது. இதனை சரி செய்வதற்க்கு கூட பணம் இல்லாமல் இருந்தார் வி.ஏ.துரை. பின் இவருடைய மருத்துவ செலவிற்கு சூர்யா, ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்கள் உதவி செய்திருந்தார்கள். இதை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்து துரை வீடு திரும்பினார். இந்த நிலையில் வி.ஏ.துரை நேற்று இரவு சென்னையில் உள்ள அவருடைய வீட்டில் காலமாகி இருக்கிறார்.

இயக்குனர் கே.செல்வபாரதி பேட்டி;

இவருடைய மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வி.ஏ.துரை மறைவு குறித்து இயக்குனர் கே.செல்வபாரதி பேட்டி அளித்து இருக்கிறார். அதில் அவர், தயாரிப்பாளர் துரை சாருடைய இறப்பு எனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் ஒரு அருமையான மனிதர். எல்லோரிடமும் தன்மையாக தான் பழகுவார். நான் விஜய் உடைய படங்களை இயக்கிக் கொண்டிருக்கும்போது அவரின் அறிமுகம் கிடைத்தது.

-விளம்பரம்-

வி ஏ துரையின் குணம்:

சின்ன பட்ஜெட்டில் ஒரு படம் தயாரிக்க நினைக்கிறேன். நீங்கள் இயக்குவீர்களா? என்று கேட்டார். அவர் அன்று கேட்டது இன்னும் என் மனதுக்குள் இருக்கிறது. திட்டமிட்டு செய்வதில் அவர் கெட்டிக்காரர். படப்பிடிப்பு விஷயத்தை அத்தனையும் சரியாக கொடுப்பார். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அவர் வரவே மாட்டார். இருந்தாலும், முன்னாடியே அந்த இடத்தில் தேவையான எல்லா விஷயத்தையும் திட்டமிட்டு செய்வார்.
மேலும், தொழில்நுட்ப கலைஞர்கள் மீது அதிக அன்பு கொண்டவர். அத்தனை பேரிடமும் பாசமாக பழகுவார்.

வி ஏ துரை குறித்து சொன்னது:

‘விவரமான ஆளு’ என்ற படத்தில் சத்யராஜ், தேவயானி, மும்தாஜ், விவேக் என்று நிறைய பேர் நடித்திருந்தார்கள். அத்தனை பேரையும் வைத்து 40 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. நான் 39 ஆவது நாளில் மொத்த படப்பிடிப்பை முடித்து விட்டேன்.. இப்ப சினிமா டிஜிட்டல் ஈஸியான விஷயம். ஆனால், அப்படி இல்லை. பிலிம்ல சூட் பண்ணினோம். அவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு படத்தை முடிக்க துரை சாருடைய சரியான திட்டங்கள் தான் காரணம் என்று சொல்வேன். தற்போது அவருடைய இழப்பு திரை உலகிற்கு மட்டும் இல்லை எனக்கும் பேரிழப்பாக இருக்கிறது என்று கண் கலங்கி கூறியிருக்கிறார்.

Advertisement