‘பெண்ணின் திருமண வயது 21’ – புதிய சட்டம் குறித்து ஓவியா போட்ட பதிவு – குவியும் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்.

0
637
oviya
- Advertisement -

இந்தியாவில் பெண்ணின் திருமண வயது 18 ஆக இருக்கிறது. இதை மாற்ற அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுவாகவே சிறுவயதிலேயே திருமணம் ஆகும் பெண்கள் குடும்ப பாரம் என பெரிய சுமைகளை சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அவர்களுக்கான ஆசை, லட்சியம் என்று எல்லாம் கனவாகவே போய் விடுகிறது. இதோடு சிறு வயதிலேயே பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். இது காலங்காலமாக நடந்து வருகிறது. இதை மாற்ற தான் இந்தியாவின் பிரதமர் மோடி ஒரு திட்டத்தை கொண்டு வந்து இருக்கிறார்.

-விளம்பரம்-
Actress Oviya latest saree photoshoot | புடவையில் பரவசமூட்டிய ஓவியா…ஓடிவந்து  பாராட்டிய ஃபேன்ஸ் ! - FilmiBeat Tamil

இந்தியாவில் பெண்ணின் திருமண வயது 18. இவை தற்போது பதினெட்டில் இருந்து இருபத்து ஒன்று ஆக மாற்ற வேண்டும் என பிரதமர் மோடி தீர்மானித்திருந்தார். இந்த நிலையில் இதற்கு பலரும் சோசியல் மீடியாவில் ஆதரவாகவும் எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார்கள். இதற்கான செயற்குழுவை ஜெயா ஜெட்லி தலைமையில் அமைக்க மத்திய அமைச்சரவை தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்தது. பெண்ணின் திருமண வயதை மாற்ற சட்ட திருத்தத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் #MarriageAge என்ற ஹாஸ்டேக் கிளம்பியது.

- Advertisement -

நடிகை ஓவியா போட்ட டீவ்ட்:

இந்த நிலையில் பெண்ணின் திருமண வயதை குறித்து நடிகை ஓவியா டீவ்ட் ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, பெண்ணின் திருமண வயதை உயர்த்துவது சரியான முடிவு தான். இதற்கு மனபூர்வமாக நான் ஆதரிக்கிறேன். பெண்கள் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்ள சட்டமே அனுமதித்தால் அவர்களால் கல்லூரிப் படிப்பு, கனவு, வேலை என பல விஷயங்களை சாதிக்க முடியாது. தங்களுடைய வாழ்க்கையை தியாகம் செய்ய வேண்டி வருகிறது.

ஒவியாவிற்கு ஆதரவு அளிக்கும் ரசிகர்கள்:

சிறுவயதிலேயே திருமணம் ஆகி அவர்களுடைய மொத்த வாழ்க்கையும் குடும்ப சுமையால் போய் விடுகிறது என்று பதிவிட்டு இருக்கிறார். இப்படி ஓவியாவின் பதிவிற்கு பலர் ஆதரித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார்கள். அதோடு ஓவியா இடம் ஏகப்பட்ட ரசிகர்கள் நீங்கள் பிக் பாஸ் ஓடிடிக்கு கண்டிப்பாக வருவீங்களா? பிக் பாஸ் ஓடிடிக்கு வந்தால் நீங்கல் தான் டைட்டில் வின்னர் என்றும் ஓவியா ஆர்மி கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-

ஓவியா பற்றிய தகவல்:

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் ஓவியா. இவர் மாடலிங் மூலம் தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதற்கு பின் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த களவாணி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பு மலையாளத்தில் கங்காரு என்ற படத்தின் மூலம் தான் சினிமாவிற்குள் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின் 2017இல் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார்.

ஓவியா நடிக்கும் படங்கள்:

இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்ற ஆர்மியே இவரால் தான் உருவானது. இந்நிகழ்ச்சியில் இவருடைய எதார்த்தமான குணமும், பேச்சும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்தது. இதற்கு பிறகு இவர் பல படங்களில் கமிட்டானார். தற்போதும் சோசியல் மீடியாவில் ஓவியா ஆர்மி வலம் வந்து கொண்டு தான் இருக்கின்றது. தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

Advertisement