ஆரவ், வரலக்ஷ்மி நடித்துள்ள ‘மாருதி நகர் போலிஸ் ஸ்டேஷன்’ – முழு விமர்சனம் இதோ.

0
3719
Maruthi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்பவர் ஆரவ். தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன். இந்த படத்தை தயாள் பத்மநாபன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இன்று வெளியாகி இருக்கும் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ஆரம்பத்திலேயே மகத் தன்னுடைய வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு குழந்தையை ரவுடி கும்பல் கடத்துவதை பார்க்கிறார். இதை யாருக்கும் தெரியாமல் அவர் செல்போனில் வீடியோ எடுத்து அருகில் உள்ள மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் அளிக்கிறார். ஆனால், ஆனால் அந்த ஸ்டேஷனில் உள்ள இன்ஸ்பெக்டருக்கும் ரவுடி கும்பலுக்கும் தொடர்பு இருப்பதால் மகத்தை அன்று இரவே கொலை செய்கிறார்கள்.

- Advertisement -

தன்னுடைய நண்பனின் இறப்பிற்கு பழிவாங்க எஸ்ஐ வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், யாசர் மற்றும் விவேக் ராஜகோபால் திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால், அவர்களை வேறொரு கும்பல் கொலை செய்து விடுகின்றனர். குழந்தை கடத்தல் கும்பலுக்கும் போலீசுக்கும் என்ன சம்பந்தம்? குற்றவாளிகள் சட்டத்திற்கு முன் நிரூபிக்கப்பட்டார்களா? என்பதை படத்தின் மீதி கதை. பொதுமக்களை காப்பாற்ற வேண்டிய காவல்துறை அதிகாரிகளே அவர்களுக்கு எதிராக திரும்பினால் நியாயம் எப்படி கிடைக்கும்? நீதி கிடைக்காமல் பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுத்தால் என்ன ஆகும்? என்ற கதையை மையமாக வைத்து கிரைம் கில்லர் பாணியில் இயக்குனர் கொடுத்திருக்கிறார்.

இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் எஸ் ஐ யாக நடித்திருக்கிறார். இவர் போலீஸ் அதிகாரியாக தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். சொல்லப்போனால் படத்தின் கதை வரலட்சுமியை சுற்றி தான் நடக்கிறது. இவரை அடுத்து சந்தோஷ் பிரதாப் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். இரண்டாம் பாதியில் இருந்து தான் ஆரவ் ஏபிசி ஆக வருகிறார். ஆரவ் வந்த பிறகுதான் படத்தில் ட்வீஸ்ட் நடக்கிறது. ஒரு போலீஸ் அதிகாரிக்கு தேவையான கம்பீரமும் தோற்றத்திலும் ஆரவ் இருந்தாலும் நடிப்பில் இன்னும் கொஞ்சம் ஸ்கோர் செய்திருக்கலாம்.

-விளம்பரம்-

மேலும், படத்தின் பெரும்பாலான காட்சிகள் போலீஸ் ஸ்டேஷனை சுற்றி நடக்கிறது. ஆனால், போர் எதுவும் அடிக்கவில்லை . பாடல்களில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். பரபரப்பான கிரைம் திரில்லர் பாணியில் தான் இந்த படமும் உருவாகிறது. ஆனால், சில இடங்களில் அதிக லாஜிக் குறைபாடுகள் நடந்திருக்கிறது. அதேபோல் நண்பர்களுக்கு இடையான காட்சிகளும் பெரிதாக காட்டவில்லை. கதைக்களம் சரியாக இருந்தாலும் இயக்குனர் அதை கொண்டு சென்ற விதத்தில் சொதப்பி இருக்கிறார்.

நிறை:

வரலட்சுமி சரத்குமார், ஆரவ் நடிப்பு சிறப்பு

கிரைம் திரில்லர் படம்

ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை சேர்த்து இருக்கிறது

மக்கள் காவல்துறைக்கு இடையே நடக்கும் பிரச்சினை குறித்து கதை

குறை :

ஆங்காங்கே நிறைய லாஜிக் குறைபாடுகள்

பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்

இயக்குனர் கதைக்களத்தை கொண்டு செல்லும் விதத்தில் கவனம் செலுத்தி இருக்கலாம்

இன்னும் படத்தின் சுவாரசியத்தையும் அழுத்தத்தையும் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்- டைம் பாஸ்

Advertisement