விஜய்யை பற்றி புகழ்ந்து பேசுவதாக நினைத்து மாஸ்டர் மகேந்திரன் பேசிய பேச்சால் ரஜினி ரசிகர்கள் கடுப்பாகி மாஸ்டர் மகேந்திரனை விமர்சித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் மாஸ்டர் மகேந்திரன். இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
அதற்கு பிறகு கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்தார். ஆனால், அந்த படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. பின் இவருக்கு பெரிதும் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் சமீப காலமாக இவருடைய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. பின் இவர் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வந்த மாஸ்டர் படத்தில் வில்லன் பவானி ரோலில் மகேந்திரன் நடித்து இருந்தார்.
ஏற்கனவே இவர் விஜய் உடன் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, மின்சாரக் கண்ணா போன்ற பல படங்களில் நடித்து இருந்தார்.மேலும், பல வருடங்கள் கழித்து இவர் மாஸ்டர் படத்தில் விஜயுடன் இணைந்து நடித்து இருந்தார். மாஸ்டர் படத்தில் மகேந்திரன் சிறிது நேரத்தில் வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று இருந்தார். ஆனாலும், மாஸ்டர் படத்திற்கு பின்னர் மீண்டும் அதே நிலையில் தான் இருக்கிறார்.
இப்படி நிலையில் நிகழ்ச்சியில் பேசிய மாஸ்டர் மகேந்திரன். என்னதான் இவரது தந்தை ஒரு இயக்குனராக இருந்தாலும். இவர் சந்திக்காத அவமானங்கள் கிடையாது. ஒரு ரஜினி சார், கமல் சார், சரத் சார் என்று எல்லாரும் இருக்கும் போது இவர்களை எல்லாம் தாண்டி அவர்கள் படத்திற்கு நிகராக சண்டை போட்டு அவர்களை படங்களை எல்லாம் முந்தி இருக்கிறார். இது எவ்வளவு பேசிய விஷயம் தெரியுமா.
ஒரே நேரத்தில் 5 படங்களுக்கு 100 நாள் விழாவை எல்லாம் கொண்டாடி இருக்கிறார். இதை எல்லாம் செய்துவிட்டு ஆடியோ லாஞ்சில் எல்லாம் உங்களால் தான் என்று சொல்லிவிடுகிறார்’ என்று பேசி இருக்கிறார். மாஸ்டர் மகேந்திரனின் இந்த பேச்சால் ரஜினி ரசிகர்கள் கடுப்பில் ஆழ்ந்து இருக்கின்றனர். குறிப்பாக ரஜினியை விஜய் எப்போது முந்தினார் என்று விமர்சித்து வருகின்றனர்.
மாஸ்டர் மகேந்திரன் இறுதியாக லேபிள் என்ற வெப் தொடரில் நடித்து இருந்தார். அருண் ராஜா காமராஜ் இயக்கிய இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதில் ஜெய், தான்யா உட்பட பலர் நடித்திருந்தார்கள். அதிலும் இந்த வெப் சீரீஸ்ஸில் மாஸ்டர் மகேந்திரன் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார். அதிலும் இவரது கெட்டப் வெளியில் தெரியக்கூடாது என்று பல மாதங்கள் மாஸ்க் போட்டு சுற்றிக்கொண்டு இருந்தார்.