நாய்காக, விஜய் படத்தின் ஆடியோ லான்ச்சை தொகுத்து வழங்கும் வாய்ப்பை மறுத்துள்ள தொகுப்பாளினி.

0
33698
Vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர்.

-விளம்பரம்-
பாவனா - ஆர்ஜே விஜய்

- Advertisement -

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இந்த படத்தினை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. இருப்பினும் விஜய்யின் சர்ப்ரைஸ் நடனம், குட்டி ஸ்டோரி, விஜய் சேதுபதியின் அரசியல் பஞ்ச் என்று ரசிகர்கள் எதிர் பாராத பல நிகழ்வுகள் நடந்தேறியது.

இதையும் பாருங்க : மாஸ்டர் படத்தில் விஜய் ப்ரெபசர் இல்லையா ? வைரலாகும் விஜய்யின் ஐடி கார்டு.

-விளம்பரம்-

இந்த விழாவை பிரபல தொகுப்பாளர்களான மிர்ச்சி விஜய் மற்றும் ஆஸ்தான விஜய் டிவி தொல்குப்பாளினி பாவனா தான் தொகுத்து வழங்கி இருந்தனர். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள பாவனா. மாஸ்டர் இசை வெளியீட்டு விழா குறித்தும் அதற்கு முன் தவறவிட்ட விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்தும் பேசியுள்ளார். அதில், விஜய் சாரின் ஆடியோ வெளியீட்டு விழாவை நான் தொகுத்து வழங்குவது முறை.

இதற்கு முன்னாள் நான் விஜய் சாரின் துப்பாக்கி படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கி இருக்கிறேன். துப்பாக்கி’ படத்திற்கு பின்னர் ‘மெர்சல்’ இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்க சொல்லிக் கூப்பிட்டாங்க.இரண்டாவது முறையா விஜய் சார் படம். ஆனால், என்னால அன்னைக்கு சந்தோஷப்பட முடியலை. ஏன்னா, அந்த வாய்ப்பை ஏத்துக்கற சூழல்ல நான் அப்போ இல்லை. அந்த நாள்ல எங்க வீட்டுல நான் வளர்த்த என்னுடைய செல்ல நாய்க்குட்டிக்கு உடல்நிலை மோசமா இருந்தது.

அதனால், என்னால அதைவிட்டு எங்கேயும் நகர முடியாத அளவுக்கு சோகத்துல இருந்தேன். எனக்கு நெருக்கமான நண்பர்கள் சிலர் இந்த காரணத்தினால் தான் நீ செய்யவில்லை என்று விஜய்க்கு போனால் என்ன நினைப்பார் என்று திட்டினார்கள். ஆனால், என் நாய்க்குட்டி என்னை விட்டு சென்றுவிட்டது. அதனால்தான் என்னால் மெர்சல் பட இசை வெளியீட்டு விழாவிற்கு வர முடியவில்லை. இருப்பினும் மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழாவை டிவியில் பார்க்கும் போது ரொம்பவே மிஸ் செய்து விட்டோமே என்று வருத்தமாகவே இருந்தது. இன்னொரு வாய்ப்பு எப்போ வரும் என்று நினைத்துக்கொண்டிருந்த சமயத்தில்தான் மாஸ்டர் வாய்ப்பு கிடைத்தது என்று கூறியுள்ளார்.

Advertisement