பிரம்மாண்டமக நடைபெற்ற மாஸ்டர் செஃப் தமிழ் பைனல் – வெற்றியாளர் இவர் தானா ? வெளியான தகவல் இதோ.

0
463
masterchef
- Advertisement -

தொலைகாட்சிகள் பலரும் தங்கள் Trpயை தக்க வைத்துக்கொள்ள பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார். ஆனால், சமீப காலமாக தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படாமல் தான் இருந்தது. ஆனால், குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கிடைத்த வர வெற்பை தொடர்ந்து பல சேனல்களும் சமையல் நிகழ்ச்சியை ஒளிபரப்ப துவங்கினர். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சன் டிவியில் துவங்கப்பட்டது மாஸ்டர் செஃப் என்ற சமையல் போட்டிக்கான நிகழ்ச்சி.

-விளம்பரம்-

மாஸ்டர் செஃப் ஒன்னும் புதிய கான்செப்ட் கிடையாது. 45 நாடுகளில் ஏறக்குறைய 30 ஆண்டுகளாக கோலோச்சிக் கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோதான் மாஸ்டர் செஃப். பிரிட்டனில் முதல்முறையாக மெகா ஹிட்டான இந்த நிகழ்ச்சி பல நாடுகளிலும் ஒளிபரப்பபட்டது. ஆனால், தமிழில் முதன் முறையாக சன் டிவி தான் இந்த நிகழ்ச்சியை துவங்கியது.

இதையும் பாருங்க : டாக்டர் பட பிரபலத்தை நேரில் அழைத்து பாராட்டியுள்ள வடிவேலு – என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

- Advertisement -

ஆரம்பத்தில் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 4 போட்டியாளர்கள் மட்டும் பைனலுக்கு சென்று உள்ளார்கள். கடந்த வாரம் நடைபெற்ற சுற்றில் வின்னி மற்றும் மணிகண்டன் ஆகிய இருவருக்குள் போட்டி நடைபெற்றது. இதில் வின்னி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

இறுதி போட்டியில் வின்னி, நித்தியா, தேவகி மற்றும் கிருத்திகா என 4 பேர் பைனலிஸ்ட்டாக தேர்வாகி இருந்தனர். இந்த நான்கு பேரில் யார் வெற்றிபெற போகிறார்கள் என்று நாளை முடிவாக இருக்கும் நிலையில் இந்த சீசனில் தேவகி வெற்றி பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை. இருப்பினும் யார் வெற்றியாளர் என்பது நாளை தெரிந்துவிடும்.

-விளம்பரம்-
Advertisement