டேபிள் மீது ஒரு சின்ன பேப்பர் கட்டிங் இருந்தது-படம் உருவான விதம் குறித்து பேசியுள்ள லோகேஷ் கனகராஜ்.

0
27366
Lokesh-Kanagaraj
- Advertisement -

மாநகரம் படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த படம் தான் “கைதி”. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தது. அதோடு இந்த படத்திற்கு இசை அமைத்தவர் சாம்.சி.எஸ். மேலும், இந்த படத்தில் சித்திரம் பேசுதடி நரேன், யோகி பாபு, பொன்வண்ணன், மகாநதி சங்கர், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்து உள்ளார்கள். இந்த படம் முழுக்க முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்ட ஆக்ஷன், திரில்லர் படம். கைதி படத்தில் ஹீரோயின், பாடல்கள் எதுவும் இல்லாத கதைக்களமாக உருவாகி இருந்தது. மேலும், கைதி படம் உலக நாயகன் கமலஹாசனின் ‘விருமாண்டி’ மற்றும் ஹாலிவுட் படமான ‘டை ஹார்ட்’ ஆகிய இரண்டு படங்களின் முன் உதாரணமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் என்றும் தெரியவந்து உள்ளது. இந்த படம் 2019 ஆம் ஆண்டின் வெளிவந்த பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்த படம் வணிக ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அது மட்டுமில்லாமல் பல பிரிவுகளில் இந்த படத்திற்கு விருது கிடைத்து உள்ளது.

-விளம்பரம்-
Image result for lokesh kanagaraj

- Advertisement -

மேலும், தீபாவளியன்று தளபதி விஜயின் பிகில் படத்திற்கு போட்டியாக கைதி படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இருந்தாலும் எதிர்பார்க்கப்பட்ட அளவில் கைதி படம் வெற்றியை தந்தது. இதுவரை வந்த கதைகளில் ஒரு புது விதமான தோற்றத்தில் கைதி படம் மக்களை கவர்ந்தது. “ஆயிரத்தில் ஒருவன், பருத்திவீரன், தீரன் அதிகாரம் ஒன்று போன்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் கார்த்திக். அந்த வகையில் கைதி படம் நடிகர் கார்த்திக் சினிமா பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த ஒரு கைதியின் கதையை மையமாக வைத்து தான் இந்த படம் நகர்கிறது. தனது மகளை முதன் முதலாக சந்திக்க செல்லும் வகையில் ஏற்படும் பல சிக்கல்களை அழகாக கூறியுள்ளார் இயக்குனர்.

இதையும் பாருங்க : அம்மா உருவத்த குத்துவாங்க, கணவர் உருவத்த குத்துவாங்க. ஆனால், பிரியங்கா யார் உருவத்த குத்தி இருக்காங்க பாருங்க.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் கைதி படம் உருவான விதத்தை குறித்து அவர் கூறியுள்ளார். அதில் அவர் கூறியது, நான் என்னுடைய நண்பர்களுடன் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது டேபிள் மீது ஒரு சின்ன பேப்பர் கட்டிங் இருந்தது. அதிலிருந்த பெயர், ஊர் பத்தி மென்ஷன் பண்ண விரும்பவில்லை. அதில் ஒரு இன்ஸ்பெக்டர் தன்னுடைய பொண்ணு கல்யாணத்துக்கு பார்ட்டி வைத்து இருந்தார். அந்த பார்ட்டிக்கு போலீசார் எல்லோரும் போயிருந்தார்கள். அப்போது போலீஸ் ஸ்டேஷனில் யாருமே இல்லை. அங்கு 4 கல்லூரி மாணவர்கள் தண்ணி குடிச்சிட்டு வண்டி ஒட்டி வந்ததில் உள்ளே இருந்தார்கள். பின் போலீஸ் ஸ்டேஷனில் யாரும் இல்லாத உடனே அவர்கள் அங்கு இருந்த வாக்கி டாக்கி எல்லாம் திருடி எடுத்து கொண்டு சென்று விட்டார்கள்.

-விளம்பரம்-

வீடியோவில் 44 நிமிடத்தில் பார்க்கவும்

இந்த சீன் வெத்து தான் நாங்கள் கைதி படத்தினை இயக்க ஆரம்பித்தோம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ரெண்டு மாதத்தில் கதையை டெவலப் பண்ணி கைதி படத்தை உருவாக்கினோம் என்று கூறினார். மாநகரம், கைதி போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது விஜய் மாஸ்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பேட்டை பட புகழ் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். மேலும், விஜய் சேதுபதி, சாந்தனு பாக்கியராஜ், ஆண்ட்ரியா, கௌரி கிஷன், சாந்தனு சஞ்சீவ் போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

Advertisement