அம்மா உருவத்த குத்துவாங்க, கணவர் உருவத்த குத்துவாங்க. ஆனால், பிரியங்கா யார் உருவத்த குத்தி இருக்காங்க பாருங்க.

0
103104
priyanka-vj
- Advertisement -

விஜய் டிவியில் பல பெண்கள் தொகுப்பாளர்களாக இருந்து உள்ளார்கள். ஆனால், எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள் . அந்த வகையில் பிரபலமான தொகுப்பாளினியாக இருப்பவர் பிரியங்கா. ஒவ்வொரு தொகுப்பாளர்கள் தங்கள் ஸ்டைலில் நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். அந்த வகையில் தொகுப்பாளனி ப்ரியங்கா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கம் ஸ்டைலுக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. அவரை வைத்து பல பேர் காமெடி செய்தாலும், கிண்டல், கேலி செய்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரேஞ்சில் மிகவும் ஜாலியாக எடுத்து கொண்டு போவார். இவர் 2013 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார்.

-விளம்பரம்-

ப்ரியங்கா அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளினியாகியாக தொகுத்து வழங்கி இருக்கிறார். அதோடு கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் இவர் நடுவராகவும் பங்கு பெற்று வருகிறார். மேலும், இவரின் சிரிப்புக்கு என்றே ரசிகர்கர்கள் படை உள்ளது. தொகுப்பாளினியாக அறிமுகமான கொஞ்ச காலங்களிலேயே பிரியங்கா மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இவர் தற்போது விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானர்.

இதையும் பாருங்க : ‘ரேஸ் கிங் அஜித்’ என்று அஜித் காலண்டரை ரிலீஸ் செய்த பிக் பாஸ் பிரபலம்.

- Advertisement -

இவருடைய காமெடியான பேச்சு, கலகலப்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என பலரையும் கவர்ந்தது. சொல்லப்போனால் டிடிக்கு பிறகு ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருப்பது பிரியங்காவுக்கு தான். மேலும், இவர் வாயாடி தொகுப்பாளினி என்று பெயர் எடுத்தவர். இவர் சில வருடங்களாக தன்னுடன் பணிபுரிந்து வந்த பிரவீன் என்பவரை காதலித்து வந்தார். பின் அவரையே திருமணம் செய்து கொண்டார். கடந்த வருடம் கூட இவர் சிறந்த தொகுப்பாளர் கான விருதையும் பெற்றார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர். இவர் நெஞ்சில் நாய்க் குட்டி டாட்டூவை குத்தி உள்ளார்.தற்போது இந்த டாட்டூ தெரியும் படியாக போட்டோஷூட் நடத்தி உள்ளார். தற்போது இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாகவே ரசிகர்களும், பிரபலங்களும் தங்களுக்கு பிடித்த அம்மா, அப்பா, கணவர், நண்பன், காதலன் ஆகியோரின் பெயர்களை தான் இந்த மாதிரி டாட்டூவாக குத்துவார்கள். ஆனால், நடிகை பிரியங்கா அவர்கள் வித்தியாசமாக நாய்க் குட்டியை டாட்டூ வாக நெஞ்சில் குத்தி உள்ளார். பிரியங்கா அவர்கள் தன்னுடைய கணவர் பெயரை கூட குத்தாமல் நாய்க் குட்டி உருவத்தை டாட்டூவாக குத்தி இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement