‘அஜித் ரசிகர்கள் கலாய்ச்சா நீங்க இத பண்ணுங்க, விஜய் ரசிகர்கள் கலாய்ச்சா’ – மாஸ்டர் பட நடிகர் ட்வீட்.

0
2015
Vijay-ajith
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் அஜித்-விஜய். தற்போது வளர்ந்து வரும் கால கட்டங்களில் இவர்கள் இருவரும் வரும் தமிழ் சினிமாவின் நம்பிக்கை தூண்கள் என்று கூட சொல்லலாம். கமல், ரஜினி படங்களுக்கு பிறகு அதிக வசூலையும் ரசிகர்கள் கூட்டத்தையும் சேர்த்தது இவர்கள் இருவரும் தான். இவர்களுக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் ரசிகர்கள் உள்ளார்கள். அதோடு பாக்ஸ் ஆபிஸில் இவர்களுடைய படம் தான் முதலிடத்தில் இருக்கும். தமிழகத்தில் “தல, தளபதி” என்று சொன்னாலே போதும் வெறித்தனம் தான். அந்த அளவிற்கு தமிழகத்தில் ‘தல, தளபதிக்கு’ ரசிகர்கள் அதிகம்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் எந்த இடத்திற்கு சென்றாலும் ‘தல, தளபதி’ ரசிகர்களை பார்த்து விடலாம். ஏன்னா, பட்டி தொட்டி எங்கும் ‘தல, தளபதி’ ரசிகர்கள் தான் உள்ளனர். உண்மையிலேயே அஜித்தும் விஜயும் நெருங்கிய நண்பர்கள். ஆனால், அஜித், விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லை.

இதையும் பாருங்க : யோகா உடையில் தலைகீழாக நின்று டீ-ஷர்டை மாட்டிய சின்னத்தம்பி சீரியல் நடிகை. வைரலாகும் வீடியோ.

- Advertisement -

எப்போதுமே விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் இடையே சண்டை, சச்சரவு இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் நடிகர் சாந்தனு அவர்கள் சமூக வலைத்தளங்களில் விஜய், அஜித் குறித்து காணப்படும் நெகட்டிவ் கருத்துகள் பற்றி தெரிவித்துள்ளார். பொதுவாகவே சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்துவது அஜித், விஜய் ரசிகர்கள் கருத்து தான்.

எப்போதும் ஒருவருக்கொருவர் மாறி மாறி ஏதாவது ஒரு விஷயத்தை செய்து கொண்டே இருக்கிறார்கள். ஒயின் அதை கலவர பூமியாகவே மாற்றி விடுகிறார்கள். ரசிகர்களின் சண்டை குறித்து தற்போது நடிகர் சாந்தனு அவர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜீத் ஆகியோரின் ரசிகர்கள் டுவிட்டரில் நெகட்டீவ் டேக்கை ட்ரென்ட்டிங்க் செய்து வந்தார்கள்.

இதையும் பாருங்க : ‘என் நாட்டிற்கு தேவையான நேரம் இது’ – மீண்டும் டாக்டர் சேவைக்கு வந்த நடிகருக்கு குவியும் பாராட்டு.

-விளம்பரம்-

இதை பார்த்த சாந்தனு அவர்கள் கூறியது, இரு தரப்பிலும் இதை ignore செய்யுங்கள். இங்க நான் ஒன்னும் பஞ்சாயத்து பண்ண வரல. அது என் வேலையும் இல்லை. யாரும் யாரையும் விட்டுக்கொடுக்க வேண்டாம். தளபதி ரசிகர்கள் தவறாக பதிவிட்டால் தல ரசிகர்கள் அதை கண்டு கொள்ளாமல் ignore செய்யுங்கள். அதே போல் தல ரசிகர்கள் ஏதாவது தவறு செய்தால் தளபதி ரசிகர்கள் கண்டு கொள்ளாமல் ignore செய்யுங்கள்.

shanthanu

நீங்கள் அதற்கு ரிப்ளை செய்வதால் தான் பெரிய பிரச்சனையாகவே வளர்ந்து விடுகிறது. அவர்கள் இருவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் சாந்தனும் ஒருவர். இவர் 1998 ஆம் ஆண்டு பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த “வேட்டிய மடிச்சு கட்டு” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். இயக்குனர், நடிகரான பாக்யராஜ் மற்றும் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் இவர்களின் மகன் தான் சாந்தனு.

இவர் 2008 ஆம் ஆண்டு சக்கரகட்டி என்ற திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து ஆயிரம்விளக்கு, கண்டேன், அம்மாவின் கைப்பேசி, சித்து பிளஸ் 2, கதை திரைக்கதை வசனம் இயக்கம், வாய்மை, முப்பரிமாணம், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடிகர் சாந்தனு கல்லூரி மாணவனாக நடித்து உள்ளார்.

Advertisement