‘படம் ஆரம்பிக்கும் போதே இப்படி தான் ஆரம்பிக்கும்’ இது தான் அஜித்தின் லுக் – வலிமை படத்தின் அப்டேட்டை சொன்ன மாஸ்டர் பட நடிகை.

0
998
sangeetha

தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித். கடந்த ஆண்டு அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள்..இப்படி ஒரு நிலையில் வலிமை படத்தின் அப்டேட் தாமதவாமதால் கடுப்பான அஜித் ரசிகர்கள் மதுரையில் வலிமை அப்டேட் காணவில்லை என்று போஸ்டர் கூட அடித்தனர்.

Image

இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் பட நடிகை மூலமாக வலிமை படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்து இருந்தனர்.

- Advertisement -

இந்த படத்தில் ஒரு சில புதுமுகங்களும் நடித்து இருந்தனர். அந்த வகையில் இந்த படத்தில் விஜய்க்கு உதவி செய்ய வரும் மருத்துவராகவும் ஸ்ரீநாத்தின் மனைவியாகவும் மதி என்ற கதாபத்திரத்தில் நடித்தவர் சங்கீதா. இந்த படத்தில் இவர் சில நிமிட காட்சியிலேயே நடித்தாலும் இளசுகள் மனதை கொள்ளை கொண்டுள்ளார் இந்த டாக்டர்.இவர் மாஸ்டர் படத்தில் மட்டுமல்லாது கார்த்தியின் சுல்தான் திரைப்படத்திலும், அஜித்தின் வலிமை படத்திலும் நடித்துள்ளாராம்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் வலிமை படத்தை பற்றி கூறும்போது அஜித்துடன் நடிக்கும் காட்சிகள் எனக்கு கிடைக்கவில்லை என்றும், இயக்குநர் வினோத் உடன் பணியாற்றியது மிகச் சிறந்த அனுபவமாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அஜித் கஷ்டப்பட்டு ஜிம் ஒர்க் அவுட் செய்து தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து மிகவும் ஸ்லிம்மாக 15 வயது குறைந்தது போல இருப்பார். இந்த படத்தில் அஜித்தின் கதாபாத்திரத்திற்கு ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என பெயர் வைத்துள்ளதாகவும் படம் ஆரம்பிக்கும் போதே இது ஒரு போலீஸ் கதையாக தான் ஆரம்பிக்கும் என்றும் கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement