டீசர் வருது வெய்ட் பண்ணுங்க. மேடையில் செம மாஸ் அப்டேட்டை சொன்ன இயக்குனர்.வீடியோ இதோ.

0
9600
master
- Advertisement -

உலகம் முழுவதும் தனெக்கென ஒரு தனி ரசிகர் படையை கொண்டவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “மாஸ்டர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தில் இவர்களுடன் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், மேத்யூ ப்ரேம், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் நடிகர் விஜய் அவர்கள் கல்லூரி பேராசிரியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்த போது வருமானவரித் துறையினர் சோதனைக்காக விஜயை அழைத்து சென்று அவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள். பின் ஆவணங்கள் எதுவும் இல்லை என்று அறிவித்தார்கள். இது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. இது அனைவருக்கும் தெரிந்ததே.

- Advertisement -

மேலும், இந்த படத்தின் போஸ்டர்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. சமீபத்தில் தான் இந்த படத்தின் குட்டி கதை பாடல் வெளியாகி சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங்கில் இருந்தது. மேலும், அடுத்த மாதம் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அவர்கள் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் ரசிகர்கள் எல்லோரும் மாஸ்டர் படத்தின் டீசர் குறித்த கேள்வியை எழுப்பினார்கள்.

அதில் லோகேஷ் கனகராஜ் அவர்கள் அதற்கான வேலைகள் எல்லாம் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியிருந்தார். மேலும்,மாஸ்டர் படம் முடிவடைய இன்னும் கிட்டத்தட்ட 40 நாட்கள் தான் இருக்கிறது என்றும் லோகேஷ் தெரிவித்துள்ளார். இதனிடையே போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது என்றும் கூறியிருந்தார். இதனால் ரசிகர்கள் எல்லாம் பயங்கர குஷியில் உள்ளார்கள். மாஸ்டர் படம் ஏப்ரல் மாதம் கண்டிப்பாக திரையரங்கிற்கு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றன.

-விளம்பரம்-
Advertisement