இது விஜய் படமா ? விஜய் சேதுபதி படமா ? – மாஸ்டர் படத்தின் முழு விமர்சனம் இதோ.

0
25644
master
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் இன்று (ஜனவரி 13) வெளியாகியுள்ளது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் இன்று இந்த படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பற்றிய முழு விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம் :

- Advertisement -

கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் விஜய் மாலையானால் மட்டை ஆகும் அளவிற்கு குடிக்கும் பழக்கத்தை கொண்டு இருக்கிறார். என்னதான் குடிகார பேராசிரியராக இருந்தாலும் இவருக்கு கல்லூரியில் மாணவர்களின் ஆதரவு பலமாக இருக்கிறது. மாணவர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் முதல் ஆளாக நிற்கிறார் விஜய். இதனாலேயே இவர் எந்த தவறு செய்தாலும் மாணவர்கள் இவருக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள். ஆனால், கல்லூரி நிர்வாகம் விஜய்யை வெளியே அனுப்ப பார்க்கிறது. ஒரு கட்டத்தில் கல்லூரியில் பெரிய பிரச்சனை ஏற்பட விஜய் தனது உன் வேலையை விட்டுவிட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஆசிரியராக சேருகிறார்.

கல்லூரியில் மாணவர்களின் பிரச்சனையை பார்த்த விஜய் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருப்பவர்களையும் நல்வழி படுத்த முயற்சிகளை எடுத்து வருகிறார். ஒருகட்டத்தில் குடிப்பழக்கத்தின் காரணமாக சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இரண்டு சிறுவர்களின் உயிரை விஜய்யால் காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது. இதனால் குடிப்பழக்கத்தை விட்டு விட்டு அந்த சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருக்கும் சிறுவர்களை நல்வழி படுத்த நினைக்கிறார்.

-விளம்பரம்-

ஆனால் அந்த சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருக்கும் சிறுவர்களை நடிகர் விஜய் சேதுபதி தனது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் அந்த சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருக்கும் சிறுவர்கள் அனைவருக்கும் மதுப் பழக்கம் போதைப் பழக்கம் என்று அனைத்தையும் கொடுத்து அதற்கு அடிமையாக்கி அவர்களை எல்லாம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி. ஒரு கட்டத்தில் நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் இந்த நடவடிக்கைகளில் குறுக்கிடஅவருக்கும் இவருக்கும் மோதல் ஏற்படுகிறது இதனால் விஜய் சேதுபதி விஜய்க்கு பல தொல்லைகளை கொடுக்கிறார் அந்த தொல்லைகள் எல்லாம் கடந்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் விஜய் சேதுபதிக்கு அடிமையாக இருக்கும் அந்த சிறுவர்களை நடிகர் விஜய் எப்படி காப்பாற்றுகிறார் ? விஜய் சேதுபதியை நடிகர் விஜய் என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

படத்தை பற்றிய அலசல் :

மாஸ்டராக வரும் விஜய்யின் காதாபாத்திர வடிவமைப்பு மற்றும் பாடி லாங்குவெஜ் ரசிகர்களை நிச்சயம் கவரும். வாத்தி கம்மிங் பாடலில் விஜய்யின் ஆட்டம் சொல்லவே வேண்டியது இல்லை. படத்தில் மாஸ்டர் மகேந்திரன் கதாபாத்திரம் ஒரு சர்ப்ரைஸ் தான். அதே போல படத்தில் அர்ஜுன் தாஸ் கைதி படத்தில் இருந்து வேறு ஒரு பரிமாற்றத்தில் கச்சிதமாக நடித்துள்ளார். படத்தில் தான் ஏன் குடிக்கிறேன் என்ற கேள்விக்கு அடிக்கடி விஜய் சொல்லும் விதவிதமான கதைகள் ரசிக்கும்படி இருக்கிறது. அதே போல படம் வெளியாகும் வரை பொத்தி பொத்தி வைத்திருந்த ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம் எதிர்பார்த்த அளவு இல்லை. கிளைமாக்ஸ்ஸில் மட்டும் கொஞ்சம் ஆக்ஷன். படத்தின் நாயகி மாளவிகா அளவான ரொமான்ஸ்சுடன் நடித்துள்ளார். அதே போல விஜய்யின் நம்பர்களாக வரும் சஞ்சீவ், ஸ்ரீநாத், ஸ்ரீமன் போன்றவர்களை பெரிதாக பயன்படுத்துவது போல இல்லை. விஜய்யை விட விஜய் சேதுபதிக்கு தான் படு மாஸ் ஏற்பட்டுள்ளது.

Image

பிளஸ் :

மற்ற விஜய் படங்களை போல டான்ஸ் மற்றும் சண்டை காட்சிகளில் பின்னி பெடலெடுத்துள்ளார் விஜய். அதே போல ரசிகர்களுக்கு ஏற்றவாறு விஜய்யை கொஞ்சம் மாடுலேஷன் செய்துள்ளார் லோகேஷ்.

படத்தின் ரோமன்ஸ் அளவாக இருந்தது பாராட்டத்தக்கது.

படத்தில் இசை மற்றும் ஒளிப்பதிவு

ஹீரோ விஜய்க்கு இணையாக விஜய் சேதுபதியின் வலுவான கதாபாத்திரம்.

படத்தில் கமல், அஜித், சூர்யா என்று அனைவரின் ரெபெரென்ஸ்ஸை வைத்து இருப்பது ஒரு பக்காவான மாஸ்டர் பிளான் தான்.

மைனஸ் :

படத்தில் ஏகப்பட்ட நடிகர் நடிகைகள் – ஆனால்,அவர்களுக்கு கொடுத்திருக்கும் கதாபாத்திரம் எல்லாம் டம்மி. உதாரணம் ரம்யா, பாடகி சௌந்தர்யா, Vj தாரா. இவர்களை எல்லாம் படத்தில் ஏன் போட்டார் என்றே தெரியவில்லை.

விஜய்யை விட விஜய் சேதுபதிக்கு மாஸ் கொஞ்சம் அதிகமாக இருப்பது, விஜய் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தலாம்.

ஒரு சில காட்சிகள் மெதுவாகவே நகர்கிறது. மாற்றப்படி படத்தில் மிகப்பெரிய குறை இல்லை.

இறுதி அலசல் :

கைதி படத்தின் மூலம் ஏற்படுத்தி இருந்த எதிர்பார்ப்பை லோகேஷ் நிச்சயம் பூர்த்தி செய்து இருக்கலாம். விஜய்யின் கடைசி படங்களான சர்க்கார், பிகில் போன்ற படங்களால் கொஞ்சம் ஆட்டம் கண்ட விஜய்யின் மாஸ் அந்தஸ்து இந்த படத்தின் மூலம் திரும்பியுள்ளது, ரசிகர்களுக்கு நல்ல விருந்து. பொதுவான ரசிகர்கள் அந்த விருந்தில் பிடிக்காததை மட்டும் ஒதுக்கி வைத்து பார்த்தால் படம் பக்கா தான். மொத்தத்தில் மாஸ்டர், ஒரு மிரட்டலான வாத்தியார் தான். இந்த படத்திற்கு BehindTalkies-ன் மதிப்பு 3.5 / 5.

Advertisement