6 தடவ பாத்துட்டன், மரண மாஸா இருக்கு, அதுவும் அந்த டைலாக்- மாஸ்டர் பட நடிகர் அர்ஜுன் தாஸ் லைவ்.

0
1009
arjun-Das
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த சில மாதத்திற்கு முன்னர் வெளியாகி இருந்த கைதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்த அர்ஜுன் தாஸ் தனது கம்பீரமான குரல் மூலமும் அற்புதமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்திருந்தார் இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவு பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

-விளம்பரம்-

பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது கைது பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோஹனனும் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே எகிறி இருக்கிறது.

இதையும் பாருங்க : நாட்டாமை படத்தில் மிக்சர் காமெடியில் நடித்த இவர் யார் தெரியுமா ? – கே எஸ் ரவிக்குமார் சொன்ன சீக்ரெட்.

- Advertisement -

அதிலும் கைது படத்தில் அசத்திய அர்ஜுன் தாஸ் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்ற செய்தியும் வெளியாகி இருப்பதால் படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு குறைவே இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் குறித்து நடிகர் அர்ஜுன் தாஸ் பேசியுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் லைவ்வில் பேசிய அர்ஜுன் தான், ட்ரைலரை 6 தடவ பார்த்துட்டேன், மரண மாஸா இருக்கு. அதுவும் விஜய் சார் படத்தில் ஒரு டைலாக் சொல்வார் அது ரசிகர்களை நிச்சயம் கவரும். மாஸ்டர் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு தேதி உறுதி செய்யபட்டுள்ளது. அதனை படத்தின் தயாரிப்பாளர் விரைவில் வெளியிடுவார். ரசிகர்கள் காத்திருப்பிற்கு இது ஒர்த்தாக இருக்கும் என்று கூறியுள்ளார் அர்ஜுன் தாஸ்.

-விளம்பரம்-
Advertisement