இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வெப் தொடர் தான் மத்தகம். இந்த வெப் தொடரில் அதர்வா, ஜெய் பீம் மணிகண்டன், நிகிலா விமல் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த வெப் தொடர் வெளியாகியிருக்கிறது. யானையின் நெற்றிப் பகுதி என்பதன் அர்த்தம் தான் மத்தகம். இந்த மத்தகதை ஸ்கிரீன் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. திரில்லர் பாணியில் வெளியாகி இருக்கும் மத்தகம் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
வெப் தொடரில் இரவு நேரம் ரோந்து பாணியில் காவலர்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அவர்கள் லோக்கல் தாதா ஒருவரை கைது செய்கிறார்கள். அந்த ரவுடி தாதா படாளாம் சேகர் இடம் வேலை செய்வதாக சொல்கிறார். ஆனால், அவர் சொன்ன தாதா இறந்து விட்டதாக காவல் துறையின் ஆவணங்களில் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இறந்த ஒருவருக்கு பிறந்தநாள் விழாவிற்கு ஏற்பாடு செய்கிறார்கள்.
இதற்காக சென்னையில் உள்ள முக்கிய தாதாக்கள் எல்லாம் ஒன்றிணைக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் அந்த நாளில் தான் முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாகவும் தலைவர் திமிங்கலம் வரப்போவதாகவும் மற்ற தாதாக்கள் இடம் சொல்கிறார்கள். இவர்களை பின் தொடர்ந்து மற்ற தாதாக்களை கண்டுபிடித்து அழிக்க முயற்சி செய்கிறார் காவல்துறை அதிகாரி அஸ்வத். அதற்குப்பின் என்ன ஆனது? என்பது தான் படத்தின் கதையாக இருக்கிறது.
வழக்கமான திரில்லர் கதையாக இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான, யாரும் சொல்லாத கேங்ஸ்டர் கதையை இயக்குனர் கொடுத்து இருக்கிறார். இந்தத் தொடர் ஆரம்பித்ததில் இருந்து பரபரப்பாக செல்கிறது. கதை ஒரே நேர்கோட்டில் சென்றாலும் கொஞ்சம் கூட சுவாரசியம் குறையவில்லை. ஒவ்வொரு காட்சியையும் விறுவிறுப்பாகவும் அழகாக இயக்குனர் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தேவையில்லாத காட்சி, கதாபாத்திரம் என்று எதுவும் கிடையாது.
படத்தின் கதை:
சொல்லப்போனால், தொடரை அழகாக ரசிக்கும் படியில் இயக்குனர் தந்து இருப்பது பாராட்டுக்குரிய ஒன்று ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியாகவும், குடும்ப தலைவனாகவும் தன்னுடைய சிறப்பாக நடிப்பை அதர்வா கொடுத்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அதர்வாவுக்கு இந்த படம் நல்ல கம்பேக் கொடுத்திருக்கிறது. நிகிலாவின் நடிப்பும் நன்றாக இருக்கிறது. இவர்களை அடுத்து மணிகண்டன் தனக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்.
இவர் தாதா வேலையை செய்யும் மாறுபட்ட மாறுபட்ட படாளம் சேகர் கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார் என்று சொல்லலாம். இவர்களை அடுத்து படத்தில் வரும் பிற கதாபாத்திரங்களும் தங்கள் வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். படத்தினுடைய ஒளிப்பதிவு பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. ஓடிடியில் வெளியான சிறந்த படங்களின் வரிசையில் மத்தகமும் ஒரு நல்ல இடத்தை பிடிக்கும்.
குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் இந்த கேங்ஸ்டர் கதையை இயக்குனர் கொடுத்திருக்கிறார். ஒரு நல்ல ஐந்து எபிசோடுகள் கொண்ட தொடராக இருக்கிறது. சஸ்பென்ஸ் சுவாரசியம் என அனைத்தையும் காண்பித்திருக்கிறார்கள். மொத்தத்தில் நீண்ட இடைவெளிக்கு மத்தகம் படம் அதர்வா, மணிகண்டனுக்கு தமிழ் சினிமாவில் திருப்புமுனையாக அமையும் என்று கூறப்படுகிறது.
நிறை:
அதர்வா, மணிகண்டன் நடிப்பு சிறப்பு
வித்தியாசமான கேங்ஸ்டர் கதை
தொடரை இயக்குனர் கொண்டு சென்ற விதம் சிறப்பு
சுவாரஸ்யம் சஸ்பென்ஸ் குறையாமல் இருக்கிறது
ஒளிப்பதிவும் பின்னணிசையும் படத்திற்கு பக்க பலத்தை கொடுத்து இருக்கிறது
குறை:
சின்ன சின்ன லாஜிக் குறைபாடுகள் தான் மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதான குறைபாடுகள் எதுவுமே படத்தில் இல்லை
மொத்தத்தில் மத்தகம்- வெற்றி முழக்கம்