தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் மழை பிடிக்காத மனிதன். இந்த படத்தில் சரத்குமார், சத்யராஜ், மெகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
சலீம் படத்தினுடைய தொடர்ச்சியாக தான் இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சலீம் படத்தினுடைய கிளைமாக்ஸ் காட்சியில் கதாநாயகன் சலீம் அமைச்சருடைய மகனை கொலை செய்துவிட்டு தப்பித்து விடுவார். அங்கிருந்து தப்பித்து வரும் ஹீரோ விஜய் ஆண்டனி ஏஜெண்டாக மாறுகிறார். இதுதான் படத்தினுடைய ஒன்லைன் கதை. ஹீரோ விஜய் ஆண்டனி, சரத்குமார் ஒன்றாக இணைந்து ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார்.
இப்படி இருக்கும் போது இவர் தனக்கு பிடித்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இருவருமே ஒன்றாக சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த சூழலில் எதிர்பார்க்காத விதமாக விஜய் ஆண்டனியின் எதிரிகள் அவருடைய மனைவியை கொலை செய்து விடுகிறார்கள். அதோடு தன்னுடைய மனைவி இறந்தபோது மழை பெய்து இருந்ததால் விஜய் ஆண்டனி மழையை வெறுக்கிறார். அதேசமயம் நடந்த தாக்குதலில் விஜய் ஆண்டனியும் அவருடைய மனைவியும் இறந்துவிட்டார் என்று சரத்குமார் அனைவரையும் நம்ப வைக்கிறார்.
பின் விஜய் ஆண்டனியை அந்தமானுக்கு அனுப்பி வைக்கிறார். அதற்குப் பின் என்ன நடந்தது? விஜய் ஆண்டனி தன் மனைவியை கொன்றவர்களை பழி வாங்கினாரா? விஜய் ஆண்டனியின் வாழ்க்கை எப்படி மாறியது? அவருடைய மனைவியை கொலை செய்ததற்கு காரணம் என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை. கதைக்களம், அதில் சொல்ல வந்த கருத்து நன்றாக இருக்கிறது. தீமை செய்பவன் அழிவான், கடைசியில் நன்மை தான் வெல்லும் என்பதை தான் இயக்குனர் சொல்லி இருக்கிறார். இருந்தாலும், அதை சுவாரஸ்யமாக சொல்லி இருந்தால் இன்னும் உணர்வுபூர்வமாக இருந்திருக்கும்.
படத்தில் ஹீரோவுக்கு மழை பிடிக்காது, நாய்க்குட்டி என்று சின்ன சின்ன விஷயங்களை அழகாக காண்பித்திருக்கிறார். ஆனால், சத்யராஜ்- சரத்குமார் உடைய கதாபாத்திரம் பெரிய அளவுக்கு ஸ்கோப் இல்லை. அதே போல் வில்லனாக வரும் நடிகரும் தன்னுடைய கதாபாத்திரத்தில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். மேலும், ஆக்ஷன் காட்சிகளை இன்னும் சிறப்பாக கொடுத்திருக்கலாம். ஆங்காங்கே லாஜிக் குறைபாடுகள் நிறைய இருக்கிறது. பாடல்களும் பெரிதாக கவரவில்லை. பின்னணி இசை ஓகே. மொத்தத்தில் ரொம்ப ரொம்ப சுமாரான படமாகத்தான் இருக்கிறது.
நிறை:
விஜய் ஆண்டனி நடிப்பு நன்றாக இருக்கிறது
கதைக்களம் ஓகே
பின்னணி இசை படத்திற்கு பக்கபலம்
கிளைமாக்ஸ் காட்சி ஓகே
குறை:
கதை களத்தை இன்னும் நேர்த்தியாக கொடுத்திருக்கலாம், சுவாரசியமாக இருந்திருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும்
ஆக்சன் காட்சிகளில் நிறைய கவனம் செலுத்தி இருக்கலாம்
முதல் பாதி பொறுமையாக செல்கிறது
பாடல்கள் பெரிதாக பார்வையாளர்களை கவரவில்லை
நடிகர்கள் கதாபாத்திரம் அழுத்தம் இல்லை.
இறுதி அலசல்:
ஆரம்பத்தில் விஜய் ஆண்டனி- விஜய் மில்டன் கூட்டணியில் வந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. விஜய் மில்டனின் கடைசி சில படங்கள் பெரிதாக வெற்றியடையவில்லை. அதேபோல் விஜய் ஆண்டனியின் படங்களும் பெரிதாக வெற்றி பெறவில்லை. வருஷத்திற்கு பல படங்கள் விஜய் ஆண்டனி நடித்துக் கொண்டிருக்கிறார். கதை தேர்வில் கவனம் வேண்டும். பொதுவாகவே விஜய் ஆண்டனியை ரசிகர்களுக்கு பிடிக்கும். ஆனால், இந்த மழை பிடிக்காத மனிதன் படம் விஜய் ஆண்டனி ரசிகர்களுக்கும் பிடிக்கவில்லை.
மொத்தத்தில் மழை பிடிக்காத மனிதன்- விஜய் ஆண்டனி ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை