இந்த நடிகரின் ரசிகையாக இல்லை என்றால் நீங்கள் கற்பழிக்கபடுவீர்கள் – வறுத்தெடுத்த அ ஆ பட நடிகை.

0
1713
nila
- Advertisement -

தமிழ் சினிமாவை பொறுத்த வரை அழகும், திறமையும் தாண்டி லக் என்ற விஷயமும் அமைந்தால் மட்டுமே நிலைக்க முடியும் என்பது ஆணித்தனமான உண்மை. சினிமாவில் அறிமுகமான அழகான நடிகைகள் சிறிது காலத்திலேயே காணாமல் போய் விடுகின்றனர். அந்த வகையில் இவரும் ஒருவர். தமிழில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடித்த படம் அன்பே அருயிரே. அந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யாவால் காதநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் தான் நடிகை நிலா. ஆனால் இவரது இயற்பெயர் மீரா சோப்ரா.

-விளம்பரம்-

மேலும், இவர் பிரபல பாலிவூட் நடிகை பிரியங்கா சோப்ராவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் ஒருசில படங்களில் நடித்த இவர் பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஆனால், பாலிவுட்டிலும் இவர் பேர் சொல்லும் அளவிற்கு பெரிய நடிகையாக வளம் வர முடியவில்லை.

- Advertisement -

தற்போது லாக்டவுன் சமயத்தில் மற்ற நடிகைகளை போல மீரா சோப்ராவும் அடிக்கடி தனது ரசிகர்களிடம் ட்விட்டரில் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் தெலுங்கில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேள்வி கேட்டதற்கு மகேஷ் பாபு என்று பதில் அளித்திருந்தார்.

மேலும், மற்றோரு ரசிகர் ஜூனியர் என் டி ஆர் குறித்து ஏதாவது சொல்லுங்க என்று கேட்டதற்கு, எனக்கு அவரை தெரியாது, நான் அவரது ரசிகர் கிடையாது என்று கூறியுள்ளது தான் தற்போது தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. மேலும், ஜூனியர் என் டி ஆரின் ரசிகர்களும் மீரா சோப்ராவை கடுமையாக சாடி வருகின்றனர்.

-விளம்பரம்-

நடிகை மீரா சோப்ரா, அ ஆ படத்திற்கு பின்னர் நடித்த இரண்டாவது படமே தெலுங்கு படம் தான். அதன் பின்னர் தெலுங்கில் 3 படங்களில் நடித்துள்ளார். இப்படி தெலுங்கில் இத்தனை படங்களில் நடித்துவிட்டு தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவரான ஜூனியர் என் டி ஆர் – ஐ யாரென்று தெரியாது என்று கூறியுள்ளது தான் என் டி ஆர் ரசிகர்களை பெரும் கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் மீரா சோப்ராவை ஜூனியர் என் டி ஆர் ரசிகர்கள் மீரா சோப்ராவை கடுமையாக ட்விட்டரில் திட்டி தீர்த்து வருகின்றனர். இந்த நிலையில் ஜூனியர் என் டி ஆரின் ரசிகர்களின் தொல்லை தாங்க முடியாத மீரா சோப்ரா. ஜூனியர் என் டி ஆரை டேக் செய்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில், உங்களை விட மகேஷ்பாபுவை எனக்கு பிடிக்கும் என்பதால் என்னை வேசி என்றும் ஆபாச நடிகை என்றும் அழைக்கிறார்கள்.

உங்களின் ரசிகர்கள் எனது பெற்றோர்களுக்கும் இதுபோன்ற வாழ்த்துக்களை அனுப்புவார்கள். இப்படிப்பட்ட ரசிகர்களை வைத்துக்கொண்டு நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? எனது பதிவை உதாசீனப்படுத்த மாட்டீர்கள் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பதிவில் ஒருவரின் ரசிகராக நீங்கள் இல்லை என்றால் அது மிகப்பெரிய குற்றம். நான் அனைத்து பெண்களுக்கும் சத்தம் போட்டு ஒன்றை கூறிக் கொள்கிறேன் நீங்கள் என்டிஆரின் ரசிகையாக இல்லை என்றால் நீங்கள் கற்பழிக்கப்படலாம், கொலை செய்யப்படப்படலாம், அல்லது உங்கள் பெற்றோர்கள் ரசிகர்களால் கொல்லப்படலாம். இவை அனைத்தும் அந்த ஜாம்பவானின் பெயரை எடுக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement