இதனால் தான் இத்தனை வருஷமா நடிக்காம இருந்தேன் – முதன் முறையாக மீரா ஜாஸ்மின் சொன்ன காரணம்.

0
1923
- Advertisement -

நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் நடிக்க துவங்கி இருக்கும் மீரா ஜாஸ்மின், இத்தனை ஆண்டுகள் நடிக்காமல் போனதற்க்கான காரணம் குறித்து பேசி இருக்கிறார். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீரா ஜாஸ்மின். 2001 ஆம் ஆண்டு வெளியான சூத்ரதாரன் என்ற படத்தில் நடித்து சினிமா துறைக்கு அறிமுகமானார் மீரா. பின் சாக்லேட் பாய் மாதவன் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘ரன்’ படத்தின் மூலம் தான் மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தின் மூலம் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டார் மீரா ஜாஸ்மின்.

-விளம்பரம்-

அதன் பின்னர் சினிமா துறையில் மீரா ஜாஸ்மினுக்கு தொட்டதெல்லாம் பொன்னானது. புதிய கீதை, ஆஞ்சநேயா, மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து, மெர்குரிப் பூக்கள், பரட்டை என்ற அழகுசுந்தரம் என பல படங்களில் நடித்தார். அதுமட்டுமல்லாம் தமிழ் சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் ஆகிய இரண்டு ஹீரோக்களுடன் நடித்த பெருமையும் இவருக்கு இருக்கிறது.இவர் இதுவரை தமிழ் மற்றும் மலையாளத்தில் 50க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

- Advertisement -

நடிப்பதில் இருந்து பிரேக் :

அதன் பின்னர் 2008ல் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான மெண்டலின் ராஜேஷ் என்பவரை மீரா ஜாஸ்மின் திருமணம் செய்துகொள்வதாக இருந்தது. ஆனால், கடந்த 2014 ஆம் ஆண்டு தனது 32 வயதில் மீரா ஜாஸ்மின் சாப்டவேர் இன்ஜினீயர் அனில் ஜான் டைட்டசை திருமண செய்துகொண்டு துபாயில் செட்டில் ஆகிவிட்டார். பின்னர் 2016 ஆம் ஆண்டு விவாகரத்தும் பெற்றார். அதன் பின்னர் தொடர்ந்து நடித்து வந்த மீரா உடல் எடை கூடியதால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

திருமணத்திற்கு பிறகு மீரா ஜாஸ்மின் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்தார். அதுமட்டுமில்லாமல் சோசியல் மீடியாவில் கூட மீரா ஜாஸ்மின் தலை காட்டவே இல்லை.சில வருடங்களுக்கு முன் இவர் பருமனாக இருக்கும் புகைப்படம் மட்டும் ஒன்று வெளியாகி இருந்தது. பின் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு பிறகு தற்போது இவர் படு ஸ்லிம்மாக மாறி இருக்கிறார். ஸ்லிம்மான மீரா ஜாஸ்மின் அடிக்கடி தன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

-விளம்பரம்-

மீரா ஜாஸ்மினின் ரீ-என்ட்ரி :

சமீப நாட்களாக பல விதமான போட்டோ ஷூட்களை நடத்தி வரும் இவர் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் நடிக்க துவங்கி இருக்கிறார். அந்த வகையில் தற்போது இயக்குநர் சசிகாந்த்  இயக்கும் ‘டெஸ்ட்’  படத்தின் மூலம் ரீ- என்ட்ரி கொடுக்க உள்ளார். இப்படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் நடிக்க உள்ளனர். 

நடிக்காமல் இருந்த காரணம் :

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் இத்தனை ஆண்டுகள் நடிக்காமல் இருந்ததற்கான காரணத்தை கூறியுள்ள மீரா ஜாஸ்மின் ‘சில ஆண்டுகாலம் எனது தனிப்பட்ட காரணங்களுக்காக நடிப்பதில் இருந்து விலகி இருந்தேன். இப்போது மீண்டும் நடிக்கத் துவங்கி இருக்கிறேன்.அதனால் எனது பயணம் மீண்டும் ஆரம்பமாவது போல் இருக்கிறது. சமூக வலைதளங்களில் என்னுடைய பதிவுகளுக்கு ரசிகர்கள் பாஸிட்டிவாக பதிலளிப்பதால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

Advertisement