மூன்றாம் திருமணம் செய்த சார்பட்டா பரம்பரை பட நடிகரின் முன்னாள் மனைவி – அட இந்த நடிகையா தானா

0
392
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகையாக திகழ்ந்த மீரா வாசுதேவன் தற்போது சைலன்டாக 3 வந்து திருமணம் செய்து கொண்ட செய்தி தான் இணையத்தில் பரவி வருகிறது. தற்போது படங்களில் துணை கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்து வரும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட மீரா வாசுதேவன் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். முதலில் ‘கோல்மால்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமான இவர், ‘உன்னை சரணடைந்தேன்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி தமிழ்நாடு அரசின் விருதையும் வென்றிருந்தார்.

-விளம்பரம்-

மேலும் இவர் 2001 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான ‘காவிரி’ என்கிற சீரியல் மூலம் சின்னத்திரையிலும் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து பெண்,சூரிய வம்சம், சித்தி 2 போன்ற சீரியல்களிலும் நடித்தார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாள சீரியல்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார் மீரா வாசுதேவன்.

- Advertisement -

முதல் திருமணம் :

இதனைத் தொடர்ந்து நடிகை மீரா வாசுதேவன் அவர்கள் அறிவுமணி, ஜெர்ரி,கத்தி கப்பல், ஆட்டநாயகன், அடங்க மறு உள்ளிட பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் இந்தப் படங்கள் எல்லாம் எதிர்பாராத அளவுக்கு வெற்றி கொடுக்கவில்லை. பின் சினிமா உலகிலும் பெரிய வாய்ப்பு கிடைக்காமல் போனது. இதனால் நடிகை மீரா வாசுதேவன் அவர்கள் ஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் மூத்த மகன் விஷால் என்பவரை காதலித்து 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின் இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு காரணமாக ஐந்து ஆண்டுகளுக்குள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.

2 வது திருமணம் :

பின்னர் 2012 ஆம் ஆண்டு பிரபல வில்லன் நடிகர் ஜான் கொகேன் உடன் மீரா வாசுதேவனுக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியது. இதனால் அந்த ஆண்டே இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்த நிலையில், மிரா வாசுதேவனின் இந்த திருமணமும் நான்கே ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு ஜான் கொகேன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரையும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார் மீரா வாசுதேவன்.

-விளம்பரம்-

தொடர்ந்து மீரா வாசுதேவன் உடனான விவாகரத்துக்கு பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகை பூஜா ராமச்சந்திரனை காதலித்து திருமணம் செய்தார் ஜான் கொகேன். தற்போது இந்த ஜோடிக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. ஆனால் தனது இரண்டாவது திருமண முறிவுக்கு பின்னர் திருமணமே செய்து கொள்ளாமல் இருந்த நடிகை மீரா வாசுதேவன், தற்போது சைலன்டாக தனது மூன்றாவது திருமணத்தை நடத்தி முடித்துள்ளார்.

3 வது திருமணம் :

கோவையில் கடந்த மே 21 ஆம் தேதி மீரா வாசுதேவனின் மூன்றாவது திருமணம் நடைபெற்று உள்ளது. அவர் விப்பின் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் எனவும் இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் எனவும் செய்திகள் வந்துள்ளன. இவர்கள் இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இணைந்து பணியாற்றி வந்ததாகவும் அப்போது ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருக்கிறது என்றும் தெரிகிறது. இதுபோல் 3-வது திருமணம் செய்து கொண்ட நடிகை மீரா வாசுதேவனுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Advertisement