அஜித்- விஜயகாந்த் இடையேயான சர்ச்சை குறித்து நடிகர் மீசை ராஜேந்திரன் அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் கேப்டன் என்ற பட்டப்பெயருடன் அனைவராலும் விருப்பப்பட்டு வந்த விஜயகாந்தின் இறப்பு செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருந்தது. விஜயகாந்த் மறைவு அவரின் குடும்பத்தை மட்டும் இல்லாமல் தமிழக மக்களையும் அதிகம் பாதித்து இருக்கிறது.

இவரின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள் . பின் விஜயகாந்தின் உடலுக்கு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் நினைவிடத்தில் தினமும் ரசிகர்கள், பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். சமீபத்தில் கூட விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டிருந்தது. இது ஒரு பக்கம் இருக்க, கேப்டன் விஜயகாந்தின் மறைவிற்கு பிரபலங்கள் சிலர் நேரில் வராதது குறித்து பல சர்ச்சைகள் எழுந்தது.
மீசை இராஜேந்திரன் பேட்டி:
குறிப்பாக, வடிவேலு- அஜித் வராதது குறித்தெல்லாம் கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். அதோடு கேப்டன் விஜயகாந்த்க்கும் அஜித்திற்கும் இடையே பிரச்சனை இருக்கிறது. அதனால் தான் அஜித் வரவில்லை என்றெல்லாம் சொன்னார்கள். இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் மீசை இராஜேந்திரன், அஜித்திற்கும் கேப்டன் விஜயகாந்த்துக்கும் பிரச்சனை என்றெல்லாம் நிறைய சொல்கிறார்கள். உண்மையிலேயே நடந்தது என்னவென்றால், கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கேப்டன் விஜயகாந்த் அஜித்தை கூப்பிட்டது உண்மை தான்.
அஜித்-விஜயகாந்த் சண்டை:
அந்த சமயம் அஜித் பைக் ஆக்சிடெண்டில் அடிபட்டு ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொண்டிருந்தார். இது எங்களுக்கு வேறு ஒருவர் மூலமாக தகவல் வந்தது. அதோட அவர் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்றாலும் தன்னால் முடிந்த உதவித்தொகையை கொடுப்பதாக அஜித் சொன்னதாக கூறினார்கள். விஜயகாந்த்தும் சரி என்று விட்டுவிட்டார். பின் அஜித்தும் 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததற்கு நீங்கள் நிகழ்ச்சிக்கு வரவில்லை வேண்டாம் என்று விஜயகாந்த் சொன்னார்.
அஜித் குறித்து சொன்னது:
அதற்குப் பிறகும் இருவருமே நன்றாகத்தான் இருந்தார்கள். மற்றபடி சோசியல் மீடியாவில் வருவது போல் அவர்கள் இருவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் கிடையாது. கேப்டன் ரொம்ப தங்கமான மனிதர். எல்லோருக்கும் உதவக்கூடியவர். கேப்டன் பற்றி அஜித்திற்கு நன்றாக தெரியும் என்று கூறி இருக்கிறார். கடைசியாக அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியாகி இருந்த துணிவு படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் நல்ல வசூலை குவித்ததாக படக்குழுவினர் அறிவித்து இருந்தார்கள்.

அஜித் திரைப்பயணம்:
இதை எடுத்து தற்போது அஜித் அவர்கள் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்தப் படத்தில் ஆரவ், திரிஷா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இதை அடுத்து அஜித் அவர்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்கிறார். அதற்கான போஸ்டர் கூட சமீபத்தில் வெளியாகியிருந்தது.