கலைஞர் ஐயாவுக்காக பண்ணது.! சந்தனப் பேழை ரகசியம் .!

0
924
- Advertisement -

ராஜாஜி ஹாலில் நாங்களே ஸ்பெஷலா ஸ்டேஜ் செட் பண்ணி, ஐஸ்பாக்ஸை லாக் பண்ணிட்டோம். அதனால்தான் அவ்வளவு நெரிசலிலும் ஐஸ்பாக்ஸ் டேமேஜ் ஆச்சே தவிர கீழே விழலை!கலைஞர் ஐயாவுடைய உடம்புக்கு இனி நாங்க தயாரித்த பெட்டிதான் வீடுன்னு தெரிஞ்சப்போ என் அப்பாவுக்கும் என் தங்கை ஜோதிக்கும் பேச்சே வரலைங்க. கண்ணீர் கட்டுப்படுத்த முடியாம வழிஞ்சுட்டே இருந்தது. அவருக்கான கடைசி வீட்டை உருவாக்கக் கடவுள் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கார்னு எடுத்துகிட்டோம்” என்கிறார் சந்தியா. அதை ஆமோதிக்கிறார் ஜோதி. இருவரும் சாந்தகுமாரின் மகள்கள். கலைஞரின் புகழுடலுக்காக ஐஸ் பாக்ஸ், ஆம்புலன்ஸ், சந்தனப்பெட்டி தயாரித்த ‘ஃபிளையிங் ஸ்குவாட் ஆம்புலன்ஸ் சர்வீஸ்’ நிறுவனர்தான் இந்த சாந்தகுமார்.

-விளம்பரம்-

funeral

- Advertisement -

ஐயா தவறிட்டாருன்னு தகவல் வந்ததும் எல்லோர் மாதிரி நாங்களும் உடைஞ்சுப் போய்ட்டோம். 12.45-க்கு ஐயாவுக்கான சந்தனப்பெட்டி ஆர்டர் எங்க நிறுவனத்துக்குக் கிடைச்சதும், கண்ணைத் துடைச்சுட்டு வேலையில் இறங்கினோம். உணர்ச்சிவசத்துடன் வேலை செய்யும்போது தப்பு ஏற்படலாம். அதனால், மனசை ஒருமுகப்படுத்திட்டு வேலையைச் செஞ்சோம். ஆனால், அவரை சந்தனப்பெட்டியுடன் மண்ணுக்குள்ளே இறக்கும்போது மொத்தமா உடைஞ்சுட்டேன் மேடம்” எனக் கண்கலங்குகிறார் சாந்தகுமார்.

இந்த நிறுவனத்தை 1977-ம் ஆண்டு ஆரம்பித்திருக்கிறார் சாந்தகுமார். நடிகர் சிவாஜி கணேசன், முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா உள்ளிட்ட பல வி.ஐ.பி-களுக்கு சவப்பெட்டி செய்து தந்தது இவர்தான். 2005-ம் ஆண்டிலிருந்து அப்பாவுக்குத் துணையாக மகள்கள் சந்தியாவும் ஜோதியும் ‘ஃபிளையிங் ஸ்குவாட் ஆம்புலன்ஸ் சர்வீஸ்’ நிறுவனத்தை நிர்வாகம் செய்துவருகிறார்கள்.

-விளம்பரம்-

sarathkumar

சாந்தகுமாரின் மூத்த மகள் சந்தியா, “ஐயாவுக்கான சந்தனப்பெட்டியில் உள் அலங்காரங்களை மதியம் 2 மணிக்கு ஆரம்பிச்சு 5 மணிக்கு முடிச்சோம். பெட்டிக்குள்ளே முழுக்க பட்டுத்துணிதான். பட்டு படுக்கை, பட்டு தலையணை எனக் கையால் தொட்டுத் தொட்டுப் பார்த்து, அவரோட உடம்புக்கு எந்த உறுத்தலும் இல்லாமல் இருக்குமான்னு செக் பண்ணினோம். பெட்டியைச் சுற்றி நான்கு புறமும் வெள்ளி தோரணையில கைப்பிடிகளை அமைச்சோம். அதைக் கலைஞர் ஐயா வீட்டு உறுப்பினர்களுக்கு அனுப்பி அவங்க சம்மதத்தோடு அதைப் பதிச்சோம். `ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என்ற வார்த்தையை மூன்று லெஜன்ட்ரி ஃபான்ட்களில் (பழம்பெரும் எழுத்து வடிவம்) ரெடி பண்ணினோம். தூரத்திலிருந்து பார்த்தாலும் தெளிவாகத் தெரியும் வகையில் ஃபான்டை தேர்வுசெய்து கோல்டு பாலிஷ் பொருத்தினோம்” என்கிறார்.

coffin-box-inside

இளைய மகள் ஜோதி, ”எங்க தாத்தா காலத்திலிருந்து நாங்க ஐயாவின் ரசிகைகள். லட்சக்கணக்கான மக்கள் ஐயாவைக் கடைசியா பார்க்க வருவாங்க எனத் தெளிவா தெரியும். அதனால், அவர் உடல் வைக்கப்போற ஐஸ் பெட்டியை எவ்வளவு உயரத்துல வைக்கணும், ஐஸ் பெட்டி மேலே கண்ணாடி கவர் செய்யணும்னு என நாங்க சொன்ன யோசனைகளை ஐயாவின் குடும்பத்தார் ஏத்துக்கிட்டாங்க. ஸ்டேஜையும் எங்க விருப்பத்துக்கு ரெடி பண்ணச் சொல்லிட்டாங்க. ராஜாஜி ஹாலில் நாங்களே ஸ்பெஷலா ஸ்டேஜ் செட் பண்ணி, ஐஸ் பெட்டி உள்ளே ஐயாவை வைத்ததும் டைட்டா லாக் பண்ணிட்டோம். அதனால்தான் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல்லேயும் ஐஸ் பெட்டி டேமேஜ் ஆச்சே தவிர கீழே விழலை” என்கிறார். கூட்டநெரிசலில் என்ன வேண்டுமானாலும் நிகழலாம் என்பதால், கூடுதல் ஐஸ் பெட்டிகள், 3 ஆம்புலன்ஸ் என எல்லாவற்றுக்கும் தயாராக இருந்துள்ளனர்.

coffin

புதன்கிழமை எங்களின் மொத்த பணியாளர்களும் ராஜாஜி ஹாலில்தான் இருந்தாங்க. போலீஸ் தடியடியில் அவங்களுக்கும் அடி விழுந்திருக்கு. ஆனா, கலைஞரின் பேரன்கள், எங்கள் பணியாளர்களை அடையாளம் கண்டுகிட்டாங்க. அவங்களை அணைத்து நன்றி சொல்லி வழியனுப்பினாங்க. கலைஞருக்கான கடைசி வீடு நாங்க உருவாக்கினது. அந்த நிறைவு போதும் எங்களுக்கு” எனத் தழுதழுக்கிறார்கள் சந்தியாவும் ஜோதியும்.

Advertisement