'மெய்யழகன்' படத்தில் வரும் கிளிகள் வளர்ப்பு இல்லம் குறித்த செய்திதான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்து இருக்கிறது. ஆனால், கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான ‘ஜப்பான்’ திரைப்படம் படும் தோல்வி அடைந்தது. ஜப்பான் திரைப்படம் நடிகர் கார்த்தியின் 25 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதைத்தொடர்ந்து தற்போது இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் படம் தான் ‘மெய்யழகன்’. பிரேம்குமார் விஜய் சேதுபதி-த்ரிஷா நடித்து, கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த கடந்த மூலம் இயக்குனராக அறிமுகமானார். தற்போது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மெய்யழகன் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதேவி, தேவதர்ஷினி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.
மெய்யழகன் படம் :
மேலும், இந்த திரைப்படத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரித்திருக்கிறது. படத்தில் நடிகர் அரவிந்த்சாமி சொத்து பிரச்சனையின் காரணமாக உறவினர்களுடன் சண்டை போட்டு தன்னுடைய சிறு வயதிலேயே, தான் உயிருக்கு உயிராக நேசித்த வீட்டை காலி செய்துவிட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்று விடுகிறார். பின், தங்கை உடைய திருமணத்திற்காக 27 ஆண்டுகள் கழித்து தன்னுடைய சொந்த ஊருக்கு வர வேண்டிய கட்டாயம் வருகிறது.

படத்தின் கதை:
அப்போது தான் கார்த்தி உடைய என்ட்ரி ஆரம்பிக்கிறது. ‘அத்தான் அத்தான்’ என்று அரவிந்த் சாமியை கார்த்தி செல்கிறார். ஆனால், அவரின் பெயரை தவிர வேற எதுவும் அரவிந்த்சாமிக்கு தெரியவில்லை. இருந்தாலும் கார்த்தி மனது கஷ்டப்படக் கூடாது என்பதற்காக தெரிந்தது போல காட்டிக் கொள்கிறார் அரவிந்த்சாமி. பின் கார்த்தியால் சென்னைக்கு போகும் பஸ்சை அரவிந்த் தவற விடுகிறார். அதன் பின்னர் அவருடனே அரவிந்த்சாமி தங்கி வருகிறார்.
கலவையான விமர்சனங்கள் பெற்றது :
ஒரு இரவு முழுவதும் கார்த்தியுடன் நேரத்தை செலவிட்ட அரவிந்த்சாமி, கடைசியில் கார்த்தி யார் என்று தெரிந்து கொண்டாரா? கார்த்திக்கும் அரவிந்த்சாமிக்கும் என்ன சம்பந்தம்? என்பதே படத்தின் மீதி கதை. கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி திரைக்கு வந்த மெய்யழகன் திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ரூபாய் 40 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது. மலையாளத்தில் இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

சுற்றுலாத் தலமாக மாறியது:
அதற்குப்பின் ஓடிடி வெளியீட்டில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.மேலும், 'மெய்யழகன்' திரைப்படத்தில் அரவிந்த்சாமி கிளிகளை வளர்த்து வரும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். நிஜத்தில் சென்னையில் உள்ள சிந்தாதிரி பேட்டையில் சுதர்சன் என்பவர் கிளிகளை வளர்த்து வருகிறார். அங்குதான் இதன் படப்பிடிப்பும் நடத்தப்பட்டது. தற்போது இந்த இடம் சுற்றுலா தளமாக மாறி உள்ளது. இந்த வீட்டின் உரிமையாளரான சுதர்சன், திவ்யா தம்பதியினர் ஒரு நாளைக்கு 25 நபர்கள் மாலை 4:30 மணிக்கு மேலாக இலவசமாக கிளிகளை பார்வையிடலாம் என கூறியுள்ளார்களாம்.






