போட்றா வெடிய..! விஜய்யின் சர்கார் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

0
1096
sarkar

விஜய் படம் என்றாலே விஜய்யின் ரசிகர்களுக்கு ஒரு திருவிழா தான். இந்நிலையில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்தே இந்த படத்தை பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.

Mersal

கடந்த ஜூன் 21 மாலை 6 மணிக்கு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இந்த படத்திற்கான டைட்டிலும் வெளியாகி இருந்தது.அதன் பின்னர் சமூக வலைத்தளம் முழுக்க இந்த படத்தை பற்றிய பீவர் தான் தொற்றிக் கொண்டிருந்தது.

விஜய்யின் பிறந்த நாளன்று வெளியாகி இருந்த ‘சர்கார்’ படத்தின் இரண்டு போஸ்டர்களும் சில நாட்களாக சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காக இருந்து வந்தது. மேலும் , சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் #HBDThalapathyVIJAY,#Sarkar #Sarkar என்ற பல #tagகளை உருவாக்கினார்.

sarkar

மேலும், இந்த tag குகள் ட்விட்டரில் பல லட்சம் நபர்களால் விரும்பப்பட்டு சாதனை படைத்தது. இந்திய ட்விட்டரின் இயக்குனர் தரண்ஜித் இந்த வருடத்திலேயே அதிக வரவேற்பை பெற்ற படம் சர்கார் தான் என அறிவித்துள்ளார்.இந்நிலையில் வணக்கம் ட்விட்டர் விழாவில் ‘சர்கார் படம்’ தான் இந்த வருடத்திலேயே டுவிட்டரில் அதிகம் வரவேற்பு பெற்ற படமாக அதிகார பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.கடந்த வருடம் அதிகமாக பயன்படுத்தப்பட்ட வார்த்தை ‘மெர்சல்’ என்பதும் கூடுதல் தகவல்.