மெர்சல்’ படத்தில் என் கேரக்டர் பேரைக் கேட்டாலே சிரிப்பீங்க! – யோகி பாபு

0
3560
Mersal

விஜய்யுடன் ‘மெர்சல்’ படத்தில் நடித்த சந்தோஷத்தில் திக்குமுக்காடியிருக்கும் யோகி பாபுவை பல பிஸியான ஷூட்டிங்குக்கிடையில் பிடித்தோம்.
Yogi Babuமெர்சல்‘ படத்தைப் பற்றித்தானே கேட்கப்போறீங்க, சத்தியமா படத்தோட கதை பத்தி எனக்குத் தெரியாது. விஜய்யோட ‘ஜில்லா’ மற்றும் தெறி’ படத்திலும் நான் சின்ன ரோல் பண்ணியிருப்பேன். ஆனா, படத்தோட எடிட்டிங்கில் நான் நடிச்ச சீன் எல்லாம்
கட் ஆகிடுச்சு. அதுனால, விஜய் படத்தில் நடிக்கிறீங்களானு அட்லி கேட்டவுடன், நான் கதையைக்கூட கேட்காமல் நடிக்கப் போயிட்டேன். ரசிகர்கள் எல்லாருக்கும் படத்தோட டைட்டில் ‘மெர்சல்’னு தெரிய வந்தப்பதான் எனக்கும் தெரியும். படத்தோட பெயர் மூன்று கெட்டப்புக்கு ஏற்ற மாதிரி நல்லாயிருக்கு.

இதையும் படிங்க: இணையத்தில் தீயாய் பரவும் மெர்சல் படத்தின் கதை..!

- Advertisement -

மூன்று கெட்டப்பில் விஜய் நடிக்கும் இந்தப் படத்தில், மூன்றாவது கெட்டப்பில் வரும் விஜய், சமந்தாவுடன்தான் என் கேரக்டரும் ட்ராவல் ஆகும். படத்துல என் கேரக்டர் பெயர் ‘நோலா’. அதுக்கு என்ன மீனிங்ன்னுகூட நான் கேட்கல. ஆனா பேரைக் கேட்டாலே பலர் சிரிப்பாங்க.
yogibabu-vijay
ஜி.வி.யுடன் நான் நடிச்சிருக்குற ‘செம’ திரைப்படமும் ரிலீஸாகப்போகுது. இந்தப் படத்தில் ‘ஓமகுண்டம்’ என்ற பெயரில்தான் படம் முழுக்க வரேன். ஜி.வி.பிராகாஷுடன் சேர்ந்து டைமிங்கில நிறைய டைலாக்ஸ் பேசியிருக்கேன். தொடர்ந்து சிவகார்த்திகேயனோட எல்லா படங்கள்ளயும் நடிச்சிட்டு வரேன். ஆனா, ‘வேலைக்காரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் என்னை நடிக்கக் கூப்பிட்டார். கால்ஷீட் பிரச்னை காரணமாக நடிக்க முடியாமல் போயிருச்சு.
Yogi Babuஅதனாலேயே பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நடிக்க சீக்கிரமே குற்றாலம் கிளம்பப் போறேன்” என்று ஜூட் விட்டார் யோகி பாபு.

Advertisement