மெர்சல் படத்தால் இத்தனை கோடி நஷ்டமா ! புலம்பும் பிரபல தயாரிப்பாளர் ?

0
3113
mersal

இந்த வருடத்தில் தமிழ் சினிமாவில் வெளிவந்த படங்களில் விஜயின் மெர்சல் படம் பல பிரச்சனைகளுக்குப் பிறகு திரைக்கு வந்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. மக்களிடன் நல்ல வரவேற்பு இருந்த இப்படம் பல கோடி நஷ்டத்தை ஏற்ப்படுத்தியதாக பிரபல தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வர்ஷா அஷ்வதி, சாய் பிரிங்கா, தம்பி ராமய்யா, கஞ்சா கருப்பு , கலாபவன் மணி, ஆர். சுந்தர்ராஜன் ஆகியோரை வைத்து ‘கங்காரு’ என்ற படத்தை தயாரித்தவர் சுரேஷ் காமாட்சி.

இதையும் படிங்க: அட்லீ சார் கொஞ்சம் யோசிச்சி பேசுங்க ! இதெல்லாம் நடக்குற காரியமா ?

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ‘சிரிக்க விடலாமா’ என்ற படத்தின் ஆடியோ லான்ச்சின் மேடையில் பேசும் போது தமிழ் திரையுளகில் எந்த ஒரு சங்கத்திலும் ஒற்றுமை இல்லை எனக் கூறி பரபப்பை ஏற்ப்படுத்தியவரும் இதே தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தான்.

தற்போது மெர்சல் படத்தைப் பற்றியும் ஒரு பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளார். மெர்சல் படம் ₹.30 முதல் ₹.40 கோடி வரை நஷ்டத்தை ஏறப்படுத்தியுள்ளது. இந்த பேச்சு தற்போது கோடம்பாக்க வட்டாரத்திலும், ரசிகர்களிடையேயும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.