மெர்சல் படத்தில் பணியாற்றிய முக்கிய கலைஞருக்கு இன்னும் சம்பள பாக்கி வழங்கவில்லையாம்..!எழுந்த திடீர் சர்ச்சை..!

0
1273
mersal
- Advertisement -

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல் ‘ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளிவந்த வேலையில் ஒரு சில அரசியல்வாதிகளின் இலவச ப்ரோமோஷனால் சர்வதேச அளவில் இந்த படம் கவனத்தை ஈர்த்தது.

-விளம்பரம்-

Mersalmagictrainer

- Advertisement -

இந்த படம் வெளியாகி ஓராண்டிற்கு மேல் ஆகியும் சமீபத்தில் இந்த படம் சர்வதேச அரங்கில் பல்வேறு அங்கீகாரத்தை பெற்றது. இந்த படத்தில் நடிகர் விஜய் மூன்று கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் ஒரு விஜய் மாஜிக் செய்யும் கலைஞசராக நடித்திருந்தார்.

மேஜிக் கலைஞசராக நடித்திருந்த விஜய் அதற்காக 6 மாதத்திற்கும் மேலாக பிரபல மேஜிக் நிபுணர் ராமன் என்பவரிடம் பயிற்சியும் மேற்கொண்டுள்ளார். இதனை படக்குழு தான் நடிகர் விஜய்க்கு ஏற்பாடு செய்துள்ளது.

-விளம்பரம்-

இந்நிலையில் மேஜிக் நிபுணரான ராமன், இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளது என்னவெனில் மெர்சல் படத்தில் நான் 6 மாத காலம் பணியாற்றினேன். ஆனால்,எனக்கு அந்த படத்தில் பணியாற்றியதற்காக முழுமையாக சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என்று திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement