“மெர்சல்” அட்லீக்கு இன்னும் எத்தனை கோடி சம்பளம் பாக்கி தெரியுமா ?

0
2515

மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியானாலும் இன்னும் பல தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும், படம் இன்னும் சில தினங்களில் 50 நாட்களைத் தொட்டுவிட்டும்.
அதே போல் படம் ₹ 250 கோடிக்கும் மேல் வசூல் செய்தாலும், ஒரு சில தயாரிப்பாளர்கள் மெர்சல் படம் ₹ 30 முதல் ₹ 40 கோடி வரை நஷ்டம் என்றும் கூறி சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். இதனை எல்லாம் பொருட்படுத்தாலும் மெர்சல் தயாரிப்பு தரப்பு வசூலில் கல்லாக கட்டிக் கொண்டிருக்கிரது.

தற்போது அதில் புதிய பிரச்சனை என்னவென்றால் படத்தின் இயக்குனர் அட்லீக்கு இன்னும் ₹ 5.5 கோடி சம்பளம் பாக்கி தரவில்லையாம். மேலும் படத்திற்கு வந்த விமர்சனத்தாலும் தணிக்கை சான்றிதல் பெற கடைசி நேரத்தில் வந்த பிரச்சனையாளும் தயாரிப்பு தரப்பு இயக்குனர் அட்லீ மீது கோவத்தில் உள்ளதாம்.
Vijay and Atleeஆனால், நடிகர் விஜய் அந்த சம்பளத்தை கேட்டு வாங்கிக் கொடுப்பதாக இயக்குனர் அட்லியிடம் கூறியுள்ளதாகத் தெரிகிறது. எப்படியும் படம் ப்லாக் பஸ்டர் ஹிட் என்பதை அனைவரும் கண்முன் பார்த்த படம் சமீபத்திய புதிய சர்ச்சைகளில் மாட்டி வருவது தளபதி ரசிகர்ளுக்கு மன வருத்தத்தைக் கொடுத்துள்ளது.