தயாரிப்பாளராக களமிறங்கி இருக்கும் நெல்சனின் முதல் படம் – ஹீரோ யார் தெரியுமா?

0
418
- Advertisement -

நெல்சன் புதிதாக தொடங்கியிருக்கும் தயாரிப்பு நிறுவனம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் நெல்சன் திலீப்குமார். இவர் ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஸ்கிரிப்ட் ரைடராக பணியாற்றி இருந்தார். பின் இவர் பெல்லி, பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ், ஜோடி நம்பர், ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் குழுவில் பணியாற்றி வந்தார். இவர் முதன்முதலாக சிம்பு மற்றும் ஹன்சிகாவை வைத்து ‘வேட்டை மன்னன்’ என்ற படத்தை எடுப்பதாக இருந்தது.

-விளம்பரம்-

இந்த திரைப்படத்தின் பணிகள் துவங்கப்பட்டு படப்பிடிப்புகள் கூட நடைபெற்றது. ஆனால், ஒரு சில காரணங்களால் இந்த திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதன்பின்னர் இவர் நயன்தாரா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கோலமாவு கோகிலா’ என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து இவர் எடுத்த ‘டாக்டர்’ படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

- Advertisement -

நெல்சன் திரைப்பயணம்:

பின் கடந்த ஆண்டு இவர் விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மாபெரும் தோல்வியை தழுவியது. இதனால் இவர் விஜய் ரசிகர்களாலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இவர் ரஜினியை வைத்து ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி இருக்கிறார். இதனால் நெல்சனும் கதைக்களத்தில் அதிக கவனம் செலுத்தி இருந்தார். மேலும், பல முயற்சிக்கு பின் ரஜினியின் “ஜெயிலர்” படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

ஜெயிலர் படம்:

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். படத்தின் ஒவ்வொரும் பாடலும் பட்டைய கிளப்பி இருக்கிறது. மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் கிருஷ்னன், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், மோகன் லால், விநாயகம் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இருந்தது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் வசூலை வாரி குவித்து வருகிறது. விஜய் சேதுபதி (பெண்)

-விளம்பரம்-

நெல்சன் தயாரிப்பு நிறுவனம்:

இந்த நிலையில் நெல்சன் அவர்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறார். இது தொடர்பாக அவர், நான் என்னுடைய 20 வயதில் இருந்தே மீடியாவில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். இத்தனை வருடங்களில் நான் இந்த துறையில் நிறைய ஏற்ற இறக்கங்களை பார்த்து விட்டேன். என்னோட தயாரிப்பு நிறுவனமான ஃபிளெமென்ட் பிக்சர்ஸின் முதல் தயாரிப்பு அறிவிப்பதில் சந்தோஷம் அடைகிறேன். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக என்னுடைய முதல் தயாரிப்பில் படத்தை வெளியிடுவேன் என்று கூறி இருந்தார்.

நெல்சன் தயரிப்பு முதல் படம்:

மேலும், இவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் முதல் பட அறிவிப்பு நாளை வெளியாக இருக்கிறது. இது தொடர்பாக நெல்சன் உடைய நெருங்கி வட்டாரத்தில் விசாரித்த போது, நெல்சனுக்கு பல ஆண்டுகளாக தெரிந்தவரும் நண்பருமாக நடிகர் கவின் இருக்கிறார். இவர் கவினை வைத்து ஒரு படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தை நெல்சன் உதவியாளர் சிவபாலன் தான் இயக்கியிருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க காமெடி கதை. சில மாதங்களுக்கு முன்பே இந்த படத்தினுடைய படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது என்று கூறப்படுகிறது. இதை அடுத்து நெல்சன் தன்னுடைய இரண்டாவது படத்திற்கான கதையையும் தயார் செய்வதாக கூறப்படுகிறது.

Advertisement