‘கோபி அத்தான் IS BACK’ – புது சீரியலை தொடங்கும் திருமுருகன். இனி தான் உண்மையாக TRPய பாக்க போறீங்க.

0
114
- Advertisement -

திருமுருகன் புதிய சீரியலை எடுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகின்றது. அதிலும் சன் டிவி சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. இதனால் வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை சன் டிவி ஒளிபரப்பாகி வருகிறார்கள். மேலும், காலங்கள் கடந்தாலும் மக்களின் பேவரட் சீரியலில் ஒன்று தான் மெட்டிஒலி. 90ஸ் கிட்ஸ்களின் மறக்க முடியாத சீரியலில் ஒன்று மெட்டி ஒலி.

-விளம்பரம்-

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பார்த்து ரசித்து மகிழ்ந்த சீரியல். அதிலும் ‘அம்மி அம்மி அம்மி மிதித்து’ என்ற பாடல் இன்றளவும் மக்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றது. 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் தான் இந்த தொடர் ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியலை திருமுருகன் அவர்கள் இயக்கி இருந்தார். இந்த சீரியலில் டெல்லி குமார், காவேரி, காயத்திரி, வனஜா, உமா, ரேகா, சேத்தன், நீலிமா ராணி,போஸ் வெங்கட் மற்றும் திருமுருகன் போன்ற பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

- Advertisement -

மெட்டிஒலி சீரியல்:

ஆண்டுகள் பல கடந்தாலும் தற்போது வரை மக்கள் மெட்டி ஒலி சீரியலை பற்றி மக்கள் பேசிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். இந்த தொடரின் மூலம் திருமுருகன் சின்னத்திரையில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதன் பின் இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்த தொடர் நாதஸ்வரம். இந்த தொடரில் பலர் நடித்தும் இருந்தார்கள். இந்த தொடர் குடும்ப உறவுகளின் கதையை மையமாகக் கொண்டது. இந்த தொடர் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

கல்யாண வீடு சீரியல்:

அதற்கு பின் திருமுருகனின் சொந்த தயாரிப்பு நிறுவனமாக திரு பிக்சர்ஸ் மூலம் கல்யாண வீடு என்ற ஒரு சீரியலையை சன் டிவியில் ஒளிபரப்பு செய்து இருந்தார். இதனால் தமிழ்நாட்டு மகளிருக்கு மட்டுமே செல்லப்பிள்ளையாக திருமுருகன் இருந்தார். மேலும், அவர் தயாரிக்கும் எல்லா சீரியல்களிலும் இவர் தான் ஹீரோவாக நடித்து இருக்கிறார். இந்த சீரியல் குடும்ப பெண்கள் இடையே அதிக வரவேற்பையும், ஆதரவையும் பெற்று மகத்தான வெற்றியை பெற்று இருந்தது .

-விளம்பரம்-

குலதெய்வம் சீரியல்:

இதை தொடர்ந்து இவர் குலதெய்வம் என்ற தொடரை எடுத்திருந்தார். அந்த தொடரும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படி திருமுருகன் இயக்கத்தில் வந்த தொடர்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று நீண்ட நாட்கள் ஓடி இருந்தது. அதற்கு பிறகு திருமுருகன் ஓர் இடைவெளியை எடுத்துக் கொண்டிருந்தார். அதோடு அவரது சீரியல்கள் அனைத்தும் சன் டிவியில் மட்டுமே ஒளிபரப்பாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது திருமுருகன் புது சீரியலை இயக்க இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

திருமுருகன் இயக்கும் புது சீரியல்:

அது என்னவென்றால், திருமுருகன் அவருடைய `Thiru Tv’ யூடியூப் பக்கத்தில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன் இந்தப் புத்தாண்டில் புதிய படைப்பு வரவிருக்கும் தகவலையும் ஷேர் செய்திருக்கிறார். குடும்பம் சார்ந்த திரைக்கதைகளை எதார்த்தமாக கையாள்வது அவருடைய சிறப்பு என்பதால் பலரும் ஆவலுடன் அவருடைய புதிய படைப்பிற்காக காத்துக் கொண்டிருப்பதாக கமென்ட் செய்து கொண்டிருக்கின்றனர்.

Advertisement