10 ஆண்டுகளுக்கு பிறகு சீரியலில் நடிக்க வரும் சீரியல் நடிகை – 90ஸ் ரசிகர்களுக்கு பரிட்சியமான இவர் இப்போ எப்படி இருக்கார் பாருங்க.

0
2186
BombayGnanam
- Advertisement -

பொதுவாகவே இல்லத்தரசிகளின் ஃபேவரிட் விஷயங்களில் ஒன்றாக விளங்குவது சின்னத்திரை சீரியல்கள். தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை சீரியல்கள் அனைத்தும் குடும்ப இல்லத்தரசிகளின் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் அதில் நடிக்கும் நடிகர்களையும் தங்கள் வீட்டில் ஒருவராகவே பாவித்து வருகிறார்கள். அந்த வகையில் சீரியல் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது சன் டிவிதான். சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களுக்கு இல்லத்தரசிகள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த குடும்பமே ரசிகர்களாக இருக்கிறார்கள். அந்த வகையில் 90களில் ஒளிபரப்பான கோலங்கள், மெட்டி ஒலி, சித்தி போன்ற பல சீரியல்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அப்படிப்பட்ட புகழ்பெற்ற சீரியல்களில் நடித்த நடிகை தான் பம்பாய் ஞானம். இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இவர் மீண்டும் சீரியலுக்கு வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 90 காலகட்டத்தில் டிவி சீரியல்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பம்பாய் ஞானம். இவர் மேடை நாடகத்தின் மூலம் தான் தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கினார். பின் தொலைக்காட்சி தொடர், திரைப்படங்கள் என பிஸியாக வலம் வந்திருந்தார். 1989 ஆம் ஆண்டு ‘மகாலட்சுமி லேடீஸ் டிராமா குரூப்’ என்ற நாடகக் குழுவை தொடங்கி பம்பாய் ஞானம் நடித்து வந்தார். அந்த காலத்தில் இருந்த முன்னணி நடிகர்கள் எல்லோரும் நாடகங்களின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

- Advertisement -

பம்பாய் ஞானம் நடித்த சீரியல்கள்:

அப்படி எம்ஜிஆர், சிவாஜி என முன்னணி நடிகர்கள் நடித்த நாடகங்களுக்கு கூட்டம் எப்படி வருமோ, அதே அளவிற்கு பம்பாய் ஞானம் டிராமா குழுவின் நாடகத்திற்கும் கூட்டம் களைக்கட்டும். விசு, பூர்ணம் விஸ்வநாதன், டெல்லி கணேஷ், மௌலி என பல பிரபலமானவர்கள் நாடகம் மேடைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த காலத்தில் தனது நடிப்பால் தனி ஒரு பெண்ணாக சமூக நாடகங்களை முத்திரை பதித்தவர் பம்பாய் ஞானம். இப்படி நாடக உலகில் புகழ்பெற்று விளங்கிய பம்பாய் ஞானத்திற்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், சன் டிவியில் ஒளிபரப்பான பிரேமி, பல்லாங்குழி, சகானா, மெட்டி ஒலி, கோலங்கள், சித்தி, அண்ணாமலை, சிதம்பர ரகசியம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சின்னத்திரை சீரியலில் பதித்தார்.

பம்பாய் ஞானம் நடித்த படங்கள்:

அதே போல் ரொம்ப அழகாய் இருக்கிறாய், நளதமயந்தி, ஒரு நாள் ஒரு கனவு, வெயில், அழகிய தமிழ் மகன், ஜிகர்தண்டா போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படி நாடகம் சீரியல், படங்கள் என்று பிசியாக நடித்துக் கொண்டிருந்தார் பம்பாய் ஞானம். இதற்காக இவருக்கு 2005ஆம் ஆண்டில் தமிழக அரசு கலைமாமணி விருதும் வழங்கி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் நாடகங்களில் நடித்த காலங்களில் நாடக சூடாமணி, நாடக பத்மம், நாடக ரத்னம், வாணிகலா சுதாகரா என பல சிறப்புப் பட்டங்கள் வழங்கப் பட்டுள்ளது.

-விளம்பரம்-

பம்பாய் ஞானம் மீண்டும் ரீ என்ட்ரி :

இப்படி பிசியாக வெள்ளித்திரை, சின்னத்திரையிலும் வந்திருந்த பம்பாய் ஞானம் குடும்ப சுழலுக்காக ஒரு கட்டத்தில் விலகிவிட்டார். பின் நாடகங்களை மட்டும் தயாரித்து வெளியிட்டு வந்தார். இப்படி இருக்கும் நிலையில் இவர் மீண்டும் வர மாட்டாரா? என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் மத்தியில் சன் டிவியில் புதிய சீரியல் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் எதிர்நீச்சல். ஒரு பெண் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும். அப்படி அவள் சாதிக்கும் போது எப்படி எல்லாம் எதிர்நீச்சல் போட்டு சமாளிக்கிறார் என்பது தான் இந்த சீரியலின் கதை.

எதிர்நீச்சல் சீரியல்:

இந்த சீரியலை கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வன் இயக்குகிறார். இந்த சீரியல் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் பம்பாய் ஞானம் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் 90 காலகட்ட ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் நிலவியுள்ளது. இப்படி பத்து வருடங்களுக்கு மேலாக எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்த பம்பாய் ஞானம் மீண்டும் சன் டிவி சீரியலில் நடிக்க வருகிறார் என்று சொன்ன உடன் பிரபலங்களும், ரசிகர்களும் வரவேற்று உள்ளார்கள்.

Advertisement