இடையில் சீரியலில் நடிக்காததற்க்கு காரணம் இதுதான். மெட்டி ஒலி சீரியல் நடிகை பேட்டி.

0
2704
- Advertisement -

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பார்த்து ரசித்து மகிழ்ந்த சீரியல் என்றால் அது மெட்டி ஒலி தான். அதிலும் மெட்டி ஒலி சீரியலில் ஒளிபரப்பான ‘அம்மி அம்மி அம்மி மிதித்து’ என்ற பாடல் இன்றளவும் மக்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றது. ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்ற தந்தையும் அவரது குடும்பமும் அதற்குள் நடக்கும் நிகழ்வுகளையும் மையமாக வைத்து தான் மெட்டி ஒலி. இந்த சீரியல் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகி இருந்தது. இந்த சீரியல் பட்டி தொட்டி எல்லாம் ஹிட்டானது.

-விளம்பரம்-
‘மெட்டி ஒலி'

தற்போது இந்த க்வாரன்டீன் நாட்களில் திரும்ப சன் டிவியில் மெட்டி ஒலி சீரியலை ஒளிபரப்பப்படுகிறார்கள். மெட்டி ஒலி சீரியல் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது சரோஜா கதாபாத்திரத்தில் நடித்த காயத்ரி தாங்க. காயத்திரி சுரேஷ் மேனன் இயக்கிய ‘பாசமலர்’ என்ற படத்தில் தான் முதன் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

- Advertisement -

அப்புறம் விஜய்-அஜித் இருவரும் இணைந்து நடித்த ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் காயத்ரி நடித்து இருந்தார். அதற்கு பிறகு இவர் ஐந்து மொழி படங்களிலும் பிசியாக நடிச்சிட்டு வந்தார். இப்படி படங்களில் பிஸியா ஹீரோயினாக நடிச்சிட்டு இருக்கும் போதே இந்தி சீரியல்ல காயத்திரி நடிக்க தொடங்கினார். அதனை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான ‘குடும்பம், சாவித்திரி, லட்சியம்’ உட்பட பல சீரியலிலும் நடித்தார்.

குடும்பத்துடன் காயத்ரி

இவர் மக்களிடம் இந்த அளவுக்குப் பிரபலமாக இருப்பதற்கு காரணம் “மெட்டி ஒலி” சீரியல் தான். இந்த சீரியல் மூலம் குடும்ப பெண்களின் வீட்டில் ஒருவராகவே மாறிவிட்டார். இதனைத் தொடர்ந்து இவர் தமிழில் பல சீரியல்ல நடித்து உள்ளார். இந்நிலையில் நடிகை காயத்ரி அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் தொகுப்பாளர் இவரிடம் சீரியல் பக்கம் கொஞ்ச நாளாவே உங்களை பார்க்க முடியலையே என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

அதற்கு காயத்திரி கூறியது, நான் சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே கல்யாணம் ஆகிவிட்டது. குழந்தை பிறந்ததால் சிறிது காலம் சீரியலை விட்டு விலகி இருந்தேன். இப்போ எனக்கு செகண்ட் இன்னிங்ஸ் ரோஜா சீரியல் கிடைத்து இருக்கிறது. இந்த சீரியலில் ஹீரோவோட அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். அதே போல் ஹீரோயினியோட மாமியார் கதாபாத்திரமும் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.

Roja - Serial Promo | 11th Sep 2019 | Sun TV Serial | Tamil Serial ...

குழந்தை இருக்கிறதனால் எனக்கேத்த மாதிரி சீரியல் நேரங்களை ஒதுக்கி வைக்கிறார்கள். எனக்கு இந்த சீரியலில் ஜாலியான மாமியார் கதாபாத்திரம் என்று கூறினார். இதனை தொடர்ந்து உங்களோட ஆரம்ப காலத்தில் படங்களில் நடித்து இருந்தீர்களே என்ன ஆனது? என்று கேட்டார். அதற்கு அவர் கூறியது, நான் பள்ளி படிப்பு முடிக்கும் சமயத்தில் தான் பாசமலர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அரவிந்த் சாமி சார்,ரேவதி மேம் இந்த படத்தில் இருந்ததனால் தான் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

என்னமோ தெரியலை எனக்கு சினிமா விட சீரியல் தான் நல்லா செட் ஆகிவிட்டது. அதனால் தான் சீரியல் பக்கமே நான் ட்ராவல் பண்ணிட்டு இருக்கிறேன். சினிமாவில் நல்ல வாய்ப்புகள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியிருந்தார். தற்போது காயத்திரி சன் டிவியில் பிரபலமான சீரியலில் ஒன்னு ரோஜா சீரியல். இந்த ரோஜா சீரியலில் அம்மா என்ற கதாபாத்திரத்தில் நம்ம காயத்ரி நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்து நடித்தாலும் மக்கள் மனசுல இன்னும் சரோ–வா நீங்காத இடம் பிடித்து இருக்கிறார் காயத்திரி.

Advertisement