குழந்தை பெற்றுக்கொள்ள எடுத்த சிகிச்சையால் இறந்தாரா ? மெட்டி ஒலி தங்கை நடிகை பேட்டி.

0
84700
uma
- Advertisement -

90ஸ் கிட்ஸ்களின் பேவரட் சீரியலான மெட்டி ஒலி சீரியல் நடிகை உமா மகேஸ்வரி காலமான செய்தி சோசியல் மீடியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி பார்த்து ரசித்த சீரியல் தான் மெட்டி ஒலி. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது மட்டும் இல்லாமல் மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மேலும், இந்த சீரியலில் விஜி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் உமா மகேஸ்வரி. இவர் சீரியலில் மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். இவரது கணவர் கால்நடை மருத்துவர்.

-விளம்பரம்-

சில மாதங்களாகவே உமா மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின் இவர் சமீபத்தில் ஈரோட்டில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருந்தும் சிகிச்சை பலனளிக்காமல் உமா உயிரிழந்தார். இவருக்கு தற்போது 40 வயதுதான் ஆகிறது. இவரின் இறப்பு குறித்து ரசிகர்கள், சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உமாவின் இறப்பு குறித்து மெட்டி ஒலி சீரியலில் கடைசி தங்கையாக நடித்த ரேவதி அவர்கள் தற்போது பேட்டியளித்துள்ளார்.

- Advertisement -

அதில் அவர் கூறியிருப்பது, காலையில் எழுந்தவுடனே உமாவின் இறப்பு செய்தி கேட்டு எனக்கு என்ன பண்றதுனே தெரியல. எனக்கு உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது. என்னால நம்ப முடியல. அதைத் தொடர்ந்து எல்லாருமே எனக்கு போன் பண்ணிட்டு இருந்தாங்க. அப்புறம் தான் என்னால நம்ப முடிந்தது. விஜியா இது என்று எங்களால் ஜீரணிக்கவே முடியல. யாரும் எதிர்பார்க்காத ஒன்று. இது எங்களுடைய வாழ்க்கையில என்னைக்குமே மறக்க முடியாத ஒன்று. எனக்கு நிறைய பேர் போன் பண்ணி விஜி தற்கொலை செஞ்சுகிட்டாங்களா? அவங்க கணவருக்கும் அவங்களுக்கும் ஏதாவது சண்டையா? என தேவையில்லாத விஷயங்களை கேட்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கு.

அவங்க இல்லை என்ற வருத்தம் ஒரு பக்கம் இருக்கும் போது இவங்களாகவே ஒரு கற்பனைக் கதையை போட்டு வராங்க. விஜி குழந்தை இல்லைன்னு ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருந்தாங்க அது மூலமாத்தான் அவங்களுக்கு ஜான்டிஸ் வந்து இருக்குமா? என்று சொல்லி இருக்காங்க. அதெல்லாம் ஒண்ணுமே கிடையாது. ஒரு விஷயம் தெரியலைஎன்றால் அதைப் பத்தி எதுவுமே போட கூடாது. இதெல்லாம் பார்க்கறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. விஜிக்கு மஞ்சகாமாலை இருந்தது உண்மைதான். அதுக்கு ட்ரீட்மென்ட் எடுத்து வந்தா. ஆனால், அவளுக்கு திருப்பியும் மஞ்சகாமாலை வந்துவிட்டது. விஜி பத்தியம் இருந்துட்டு வந்தாங்க. ஆனால், சமீபத்தில் விஜி பத்தியதை பற்றியும் அவளை பற்றியும் அவளே கவனித்துக் கொள்ளவில்லை. அதுதான் உண்மையான விஷயம் என்று கூறினார்.

-விளம்பரம்-
Advertisement