நிஜத்திலேயே மெட்டி ஒலி சாந்திக்கு சக்திவேல் தொடர் நடிகை மருமகளாக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சந்தியா. இவர் திருவண்ணாமலை அருகில் உள்ள கலசபாக்கம் ஊரை சேர்ந்தவர். இவர் பிகாம், பிஎல், எம்எல் படிப்பை படித்து முடித்திருக்கிறார். இவர் பட்டிமன்ற நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். அதற்கு பிறகு இவர் சில நிகழ்ச்சிகளை தொகுப்பாளராகவும் தொகுத்து வழங்கியிருந்தார்.
குறிப்பாக, ஆதித்யா டிவியில் ஒளிபரப்பான காலேஜ் டாட் காம் நிகழ்ச்சியை இவர்தான் தொகுத்து வழங்கியிருந்தார். அதற்குப் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த கண்மணி என்ற சீரியல் மூலம் தான் இவர் நடிக்க தொடங்கினார். அதற்குப் பிறகு இவர் சத்யா, சுந்தரி நீயும் சுந்தரன் நானும், நம்ம வீட்டு பொண்ணு போன்ற பல தொடர்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சக்திவேல் என்ற தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சந்தியா குறித்த தகவல்:
இந்த சீரியலில் இவர் பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் நடிகை சந்தியாவிற்கு திருமணமாக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சந்தியா அவர்கள் முரளி கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார். இவர்களுடைய நிச்சயதார்த்தம் சில தினங்களுக்கு முன்பு தான் நடைபெற்றிருந்தது. வருகிற ஞாயிற்றுக்கிழமை தான் இவர்களுடைய திருமணம் நடைபெற இருக்கிறது.
சந்தியா திருமணம்:
இவர்களுடைய திருமணம் முழுக்க முழுக்க அரேஞ்ச் மேனேஜர் தான். முரளி கிருஷ்ணன் வேற யாரும் இல்லை மெட்டிஒலி சாந்தியின் மகன் தான். ஏற்கனவே சக்திவேல் தொடரில் மெட்டி ஒலி சாந்தியின் மருமகள் கதாபாத்திரத்தில் தான் சந்தியா நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது நிஜமாகவே இவர் சாந்தியின் மருமகளாக போகிறார். தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து பலருமே சந்தியா- முரளி ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
சாந்தி குறித்த தகவல்:
சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த மெட்டி ஒலி சீரியலில் ‘அம்மி அம்மி அம்மி மிதித்து’ என்ற பாடலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் டான்சர் சாந்தி. இவர் பதிமூன்று வயதில் கிழக்கு வாசல் படத்தில் குரூப் டான்ஸராக சினிமா உலகிற்கு அறிமுகமானவர். பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் மூவாயிரம் பாடலுக்கு மேல் நடனமாடியிருக்கிறார். அதோடு பல மொழிகளில் 500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்து இருக்கிறார்.
சாந்தி திரைப்பயணம்:
இப்படி இவர் பல படங்களில், பிரபல நடிகர்களுடன் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்து இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் தான். இந்த சீரியலுக்கு பிறகு இவருக்கு எந்த சீரியலிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் சாந்தி திருமணத்திற்கு பிறகு கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொண்டார். சில ஆண்டுகளாக இவர் மீண்டும் சீரியலில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் விஜய் டிவியில் முத்தழகு, சக்திவேல் தொடரில் நடித்து வருகிறார்.