கோமலவள்ளியும் இல்லை ஜெயலலிதாவும் இல்லை, அவரது உண்மை பெயர் இதுதான்..!ஜெ அண்ணன் மகள் தீபா புதிய சர்ச்சை..!

0
1250
Deepa
- Advertisement -

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் படத்திற்கு அரசியல் கட்சியின் எதிர்ப்புகள் கிளம்ப்பியது. படத்தில் ஜெயலலிதாவின் உண்மையான பெயரான கோமளவள்ளி என்ற பெயரையும், சர்ச்சையான காட்சிகளை நீக்க வேண்டும் என்று எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அவை அனைத்தும் படத்தில் இருந்து நீக்கப்பட்டது.

-விளம்பரம்-

J Deepa

- Advertisement -

ஆனால், கோமளவள்ளி என்பது ஜெயலலிதாவின் உண்மையான பெயர் இல்லை. அவ்வளவு ஏன் ஜெயலலிதா கூட அவரது இயற் பெயர் கிடையாது என்று ஜெயலிதாவின் அண்ணன் மகள் தீபாவும், எம்ஜி ஆர் அம்மா தீபா பேரவையின் தலைவியுமான தீபா சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற , ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவல்லி இல்லை என கூறியுள்ளார். ஜெயலலிதா பற்றி எனது தந்தைக்கு தான் நன்றாக தெரியும். அவரை என் தந்தை ‘அம்மு’ என்றே செல்லமாக அழைப்பார். மைசூரில் பிறந்த அவருக்கு ‘ஜெயா’ என்றுதான் பெயர் சூட்டினார்கள் என ஜெ.தீபா கூறியுள்ளார்.

-விளம்பரம்-

ஏற்கனவே, சர்கார் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கோமளவல்லி என்ற பெயர் ஜெயலலிதாவின் பெயர் இல்லை என்று அம்மா கட்சியின் டிடிவி தலைவர் டிடிவி தினகரன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜெயலலிதா அவர்களின் உண்மையான பெயர் என்னதான் என்று பலரும் குழம்பியுள்ளனர்.

Advertisement