மைக்கேல் மதன காமராஜன் படத்தின் சவாலான climax காட்சி – அப்போதே இப்படி ஒரு டெக்னிக்கா ? பல ஆண்டு ரகசியம் இதோ ?

0
789
michel
- Advertisement -

தமிழ் சினிமாவில் உலகநாயகன் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் கமலஹாசன். இவரது நடிப்பில் வெளியான பல்வேறு படங்கள் வெளியான போது வரவேற்பு வரவில்லை என்றாலும் அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து அதே படங்கள் மாஸ்டர் பீஸ் என்று கொண்டாடப்பட்டது. தமிழ் சினிமா உலகில் இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு திரை உலகிற்கு வெளி வந்த படம் தான் “மைக்கேல் மதன காமராஜன்”. இந்த படத்தில் கமல்ஹாசன், ஊர்வசி, நாகேஷ், கிரேசி மோகன் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு இளையராஜா அவர்கள் தான் இசை அமைத்து உள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப் படம் ஆகும். இதில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் நான்கு வேடத்தில் நடித்து உள்ளார். அதாவது திருடன் மைக்கேல், தொழிலதிபர் மதன கோபால், சமையல்காரன் காமேஷ்வரன் மற்றும் தீயணைப்பு வீரர் ராஜு என்று நான்கு வேடத்தில் நடித்து இருப்பது தான் இந்த படத்தின் சிறப்பு.

- Advertisement -

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது மேலும் இந்த படத்தில் நான்கு கமல் நடித்திருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் தான் நான்கு கமலையும் ஒரே பிரேமில் காட்டி இருப்பார்கள். தொழில்நுட்பம் பெரிதாக இல்லாத காலகட்டத்திலேயே இப்படி ஒரு காட்சியை எப்படி எடுத்தார்கள் என்ற ஒரு ஆச்சரியம் பலருக்கும் இருக்கிறது. இந்த கிளைமாக்ஸ் காட்சி குன்னூரில் எடுக்கப்பட்டது.

இந்த குன்னூர் மலை பங்களா செட்டுக்கு வெளியே இருப்பது ஒளிப்பதிவு செய்த பின் அதில் நடித்த பிரதான நடிகர்களின் படம், இந்தக் காட்சியில் ஃப்ரேமிற்குள் 20 பேர் இருப்பார்கள்,இந்தப் புகைப்படத்தில் பொன்னம்பலம் மற்றும் உயரமான வெங்கடேஷ் இல்லை,அவர்கள் இருவரும் மரத்தில் மாட்டித் தொங்குவர். இந்த கூர்க் மலை பங்களா செட்டுக்குள் இருப்பது ஒளிப்பதிவு செய்த பாஸிட்டிவ் பிரதி படம்,இதில் 12 பேர் உள்ளனர்.

-விளம்பரம்-

இதில் fire fighter ஆன ராஜுவுக்கு தான் அதிகப் பணி, மதன் ஆக்ஸ்ஃபோர்ட் MBA சண்டை போடத் தெரியாது, காமேஸ்வரன் சாது சண்டை போட மாட்டார்,ராஜுவும் மைக்கேலும் பீமும் s.n.லட்சுமி பாட்டியும் தான் அங்கே சண்டை போட வேண்டும்,அதனால் தான் ராஜூ தவிர மற்ற மூன்று கமலும் body double செய்துள்ளனர்,அந்த மூன்று body double செய்த கமல்களுக்கும் neck masking செய்த முன்னும் செய்த பின்னும் உள்ள படங்கள் இவை.

முப்பது வருடங்களுக்கு முன் இதையெல்லாம் சாதித்தது மலைப்பாக இருக்கிறது. அதிலும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் திரு B. C. கௌரிசங்கர் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நியாமாக அவருக்கு சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது வழங்கப்பட்டு இருக்க வேண்டும்.

Advertisement