திருமணம் ஆகாமலேயே பிறந்த குழந்தை – மகனின் புகைப்படத்தை பதிவிட்டு அவரது பெயரையும் அறிவித்த இலியானா.

0
1688
Ileana
- Advertisement -

தன்னுடைய மகன் குறித்து இலியானா பதிவிட்டு இருக்கும் உருக்கமான பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து இருந்தவர் நடிகை இலியானா. “இருக்கானா இடுப்பிருக்கானா” என்ற பாடலின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களை தன் மூலம் கட்டி இழுத்தவர் இலியானா. இவர் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் ஒரு மாடலும் ஆவார். இவர் ‘தேவதாசு’ எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் திரை உலகிற்கு அறிமுகமானார். வகையில் பேசிய மாரிமுத்து மீது

-விளம்பரம்-

அதன் பின் இவர் ‘கேடி’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதைத்தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வந்தார். அதிலும் விஜய் – சங்கர் கூட்டணியில் வெளிவந்திருந்த நண்பன் படத்தில் இலியானா நடித்திருந்தார். இந்த படம் இந்தியில் 3 இடியட்ஸ் என்ற பெயரில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்த படத்தின் தமிழ் ரீமேத்தில் தான் விஜய்க்கு ஜோடியாக இலியானா நடித்திருந்தார்.

- Advertisement -

இலியானா திரைப்பயணம்:

இந்த படத்தின் மூலம் இலியானா தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்தார் என்று சொல்லலாம். அதோடு இவரின் நடனம் தான் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. அதன் பின் இவர் தமிழில் நடிக்கவில்லை. பின் 2012 ஆம் ஆண்டு பர்பி என்ற படத்தின் மூலம் இவர் இந்தி மொழியில் அறிமுகமாகியிருந்தார். அதனை தொடர்ந்து ஹிந்தியில் பல படங்களில் நடித்தார். கடைசியாக இவர் பிக் புல் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இலியானா காதல் விவகாரம்:

அதன் பின் அன்ஃபர் அண்ட் லவ்லி என்ற படத்தில் இலியானா நடித்திருக்கிறார். இந்த நிலையில் நடிகை இலியானா கர்ப்பமாக இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சில ஆண்டுகளுக்கு முன்பே ஆஸ்திரேலியா புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ என்பவரை இலியானா காதலித்து வந்தார். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். அதன் பின் நடிகை கத்ரினா கைஃபின் சகோதரர் செபாஸ்டியனை இலியானா காதலித்து வருவதாக சோசியல் மீடியாவில் தகவல் பரவி வந்தது.

-விளம்பரம்-

கர்ப்பமாக இருக்கும் இலியானா:

இப்படி ஒரு நிலையில், தான் கர்ப்பமாக இருப்பது குறித்து இலியானா சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார். ஆனால், சிலர் உங்களுக்கு எப்போது திருமணம் ஆனது? குழந்தையின் தந்தை யார் ?என்ற கேள்விகளை எழுப்பி வந்தனர். பின் இவர் சமீபத்தில் தான் தன்னுடைய காதலனின் புகைப்படத்தையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார். அதன் பின் அவர் தன்னுடைய கர்ப்பமான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு இருந்தார்.

இலியானா அளித்த பதிவு:

இதனை அடுத்து தற்போது இலியானாவிற்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இது தொடர்பாக அவர் instagram பக்கத்தில் பதிவு ஒன்றும் போட்டு இருக்கிறார். அதில் அவர், எங்கள் அன்பு மகனை இவ்வுலகிற்கு வரவேற்பதில் நாங்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறோம். மேலும், அதனை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதுமட்டுமில்லாமல் இலியானா தன்னுடைய மகனுக்கு ‘Koa Phoenix Dola’ என்று பெயர் வைத்திருக்கிறார். தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement