நெருக்கடி சந்திக்கும் சர்க்கார்..!தயாரிப்பாளர் கலாநிதி மற்றும் நடிகர் விஜய் மீது வழக்கு…!அமைச்சர் சர்ச்சை பேச்சு…!

0
316
Sarkar

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் தீபாவளி திருநாளான நேற்று (நவம்பர் 6)
வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நாடு முழுவதும் வசூல் சாதனை செய்து வருகிறது.

CV shanmugam

சர்கார் படத்தில் அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் உள்ளதாக அரசுக்கு தகவல் வந்துள்ளது. படத்தில் அரசின் விலையில்லா பொருட்கள் எரிப்பது போல சில காட்சிகள் உள்ளது அந்த காட்சிகளை அவர்களாகவே நீக்கிவிட்டால் நல்லது என்று அவர் தெரிவித்திருந்தார்.

அதே போல பாஜக கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “படித்ததில் பிடித்தது. கதையை திருடுறதுன்னு முடிவு பண்ணிட்டா. நல்ல கதையா திருடுங்க” என்றும் சர்கார் படத்தை மறைமுகமாக விமர்சித்து டீவீட் செய்திருந்தார்.

இந்நிலையில் திருப்போரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “சர்காரில் அரசியல் நோக்கில் சில காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் ஆலோசனைக்குப் பின் வழக்கு பதியப்படும். மேல்மட்ட ஆலோசனைக்குப் பின் படத்தின் தயாரிப்பாளர், படத்தில் நடித்த நடிகர், படத்தை வெளியிட்ட திரையரங்குகள் மீது வழக்கு பதியப்படும் ”என்று தெரிவித்துள்ளார். இதனால் சர்கார் படத்திற்கு நெருக்கடி நேர்ந்துள்ளது.