யார் சித்தார்த். கேலி செய்த அமைச்சர் ஜெயக்குமார். பாக்ஸர் மாமா என்று சித்தார்த் கொடுத்த பதிலடியை பாருங்க.

0
5182
siddharth
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். சமீபத்தில் நடிகர் சித்தார்த் நடித்திருந்த சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது. தற்போது நடிகர் சித்தார்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து கூறிய கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமுதாயத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் விஷயங்கள் குறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை பதிவு செய்தார். இது அவருடைய வழக்கமான ஒன்று.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் இன்றைய காலகட்டத்தில் நம்முடைய கருத்துக்களை வெளிப்படுத்துவது அவசியமான ஒன்று என்றும் அவர் கூறுவார். கருப்பு பணம் விவகாரத்தில் இருந்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வரை மத்திய மற்றும் மாநில அரசு என எந்தத் தரப்பையும் விட்டு வைக்காமல் விமர்சனம் செய்து வந்தார். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குடியுரிமை சட்ட மசோதா இந்திய அளவில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பலர் பேசிக் கொண்டார்கள். இதற்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி வந்தார்கள். இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்து வந்தார். இதை பார்த்த நடிகர் சித்தார்த் இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு அதிமுக அரசு ஆதரவாக இருப்பதாக இணையங்களில் பயங்கரமாக விமர்சித்து உள்ளார்.

இதையும் பாருங்க : சூப்பர் சிங்கர் திவாகர் திருமணம். வெங்காயம் மற்றும் கொசு பேட்டை பரிசாக அளித்த பிரபலங்கள். புகைப்படம் இதோ.

- Advertisement -

சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் சித்தார்த் கூறியது, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருப்பதை நினைத்து மிகவும் வெட்கப்படுகிறேன். அதற்கு தகுதியானவர் இல்லை என்று பதிவிட்டு இருந்தார். நடிகர் சித்தார்த்தின் இந்த பதிவை அதிமுக வட்டாரத்தில் பயங்கர கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியது, முதலில் சித்தார்த் யார்? அவர் எந்த படத்தில் நடித்திருக்கிறார்? விளம்பரத்துக்காக இது போன்று வதந்திகளை எழுப்புவார்கள். அதற்காக ஒரு சில பேர் கேள்வி கேட்பார்கள் என்பதற்காக அவர்கள் எல்லாம் பெரிய ஆளாக தேவையில்லை என்று பேசி உள்ளார்.

இதை பார்த்த நடிகர் சித்தார்த் அவர்கள் டுவிட்டரில் பதிலடி கொடுத்து உள்ளார். அதில் அவர் கூறியது, என்னை யார் என்று அவருக்கு தெரியாதா?? அதுக்கெல்லாம் நான் கவலைப் படவில்லை. அதோடு 2014-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் மிகச் சிறந்த நடிகருக்கான விருதை அவருடைய அரசு தான் எனக்கு அறிவித்தது. 2017-ம் ஆண்டு அறிவித்த இந்த விருது தற்போது வரை எனக்கு வழங்கப்படவில்லை என்று ட்வீட் செய்துள்ளார். மற்றொரு டீவீட்டில், அக்கறையுடன் பேசும் வரி செலுத்தும் குடிமக்களை அவமதிப்பது உங்களை இதுவரை தான் அழைத்து செல்லும் பாக்ஸர் மாமா. நீங்கா ஒன்னம் என்னா பெரிய ஆளா ஆக்கத்தேவை இல்லை. உங்கள் வேலையைச் செய்யுங்கள். அது போதும். விரைவில் குணமடையுங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார். சித்தார்த்தின் இந்த படத்திலை கண்டு பலரும் உங்களுக்கு தில்லு தான் என்று பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement