விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல்வேறு சீசன்களை கடந்துள்ளது. சூப்பர் சிங்கர் ஜூனியர் சீனியர் என்று இரண்டு வெர்ஷானாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற பல்வேறு போட்டியாளர்கள் தற்போது சினிமாவிலும் பாடகராகவும், பாடகியாகவும் திகழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் 4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக வந்தது தற்போதைய சினிமாவில் பிரபல பாடகராக திகழ்ந்து வருகிறார் பாடகரார் திவாகர்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 4 வது சீஸனில் ஆரம்பத்தில் பல நூற்றுக்கணக்கானோர் பங்குகொண்டு ஆரம்பித்தனர். ஆனால், இறுதிப்போட்டி சோனியா, பார்வதி, சையத், சரத் சந்தோஷ், திவாகர் எனும் ஐவரோடு முடிந்தது. இந்த சீசனில் . பழைய ‘பலே பாண்டியா’ படத்தின் “நீயே உனக்கு என்றும்” என்ற பாடலை இறுதிப் போட்டியில் பாடி டைட்டிலை வென்றுஅசத்தினார் திவாகர். சூப்பர் சிங்கர் பட்டத்தை வென்ற இவருக்கு பிரபல இசையமைப்பாளரான இமான் சினிமாவில் பாடும் வாய்ப்பினை கொடுத்தார். அதன் பின்னர் பல்வேறு படங்களில் பாடல்களை பாடி அசத்தி வருகிறார் திவாகர்.
இதையும் பாருங்க : சன் டிவியின் வெற்றிகரமான சீரியலின் இரண்டாம் பாகத்திற்காக திருமணம் சீரியலில் இருந்து விலகிய பிரபலம்.
இதுவரை தமிழில், வடகறி, பஞ்சுமிட்டாய், புறம்போக்கு, ரஜினிமுருகன், பாயும் புலி, ரம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் பாடல்களை பாடியிருக்கிறார் திவாகர்இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘சீமராஜா’ படத்தில் இடம்பெற்ற ‘வாரே வாரே சீமராஜா’ என்ற பாடலை பாடி இருந்தார் திவாகர். இந்த நிலையில் பாடகர் திவாகருக்கு நேற்று (டிசம்பர் 11) திருமணம் நடைபெற்றுள்ளது. அபி என்பவரை திருமணம் செய்து கொண்டு இருக்கிறார் இந்த திருமணத்தை திவாகரை சினிமாவில் அறிமுகப்படுத்திய சீமான் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
திவாகரன் திருமணத்தில் பிரபல இசையமைப்பாளரான தேவா மற்றும் அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் போன்ற பலர் கலந்து கொண்டு இருந்தார்கள். அதேபோல பிரபல பாடகரான அந்தோணி தாஸும் இந்த திருமணத்திற்கு வந்திருந்தார். ஆனால், அந்தோணி தாஸ் கொடுத்த திருமண பரிசு தான் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. அந்தோணி தாஸ் ஒரு கூடை வெங்காயத்தை பரிசாக அளித்திருக்கிறார். அதே போல பவிஜய் டிவி ஜோடி நிகழ்ச்சியில் பங்குபெற்றஅமுதவாணன் மற்றும் ஆதித்யா புகழ் ஆதவன், கொசு பேட்டை பரிசாக அளித்தார்கள். இதனால் திருமணத்தில் சிரிப்பு மழை நிரம்பி வழிந்தது.