கணவர் செய்த கொடுமை, ஓராண்டில் விவாகரத்து – மின்சார கண்ணா பட நடிகையா இது ?

0
11191
monica
- Advertisement -

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மின்சார கண்ணா படத்தில் நடித்த நடிகை பற்றி தான் இந்த பதிவு. கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான மின்சார கண்ணா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றிருந்தது. விஜய், ரம்பா, குஷ்பு போன்ற பலர் நடித்த இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் மோனிகா காஸ்ட்லினோ. மும்பையைச் சேர்ந்த இவர் ஆரம்ப காலத்தில் இந்தி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

-விளம்பரம்-
Monica Castelino : Biography, wiki, age, height, instagram, hot images,  movies

1999 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான காலியா திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மோனிகா. தனது முதல் இரண்டு படங்களும் சரியான அங்கீகாரம் பெற்று தராததால் 2001 ஆம் ஆண்டு காமசுந்தரி என்ற கவர்ச்சி படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் ஹிந்தியில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார் இவர், வெற்றிகரமான கதாநாயகியாக வலம் வர முடியாததால் இவரால் சினிமாவில் நீண்ட வருடங்கள் தாக்கு பிடிக்க முடியவில்லை.

இதையும் பாருங்க : கவுண்டமணி மன்னிப்பு கேட்டால் ஷூட்டிங்க்கு வருவேன் – பலர் முன் கமலை கேலி செய்துள்ள கவுண்டமணி. அப்படி என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

- Advertisement -

மோனிகா கடந்த 2010ஆம் ஆண்டு துணை இயக்குனரான சத்ய பிரகாஷ் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்ட ஓராண்டிலேயே விவாகரத்து பெற்றுவிட்டனர். தனது கணவர் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக நடிகை மோனிகா புகார் அளித்திருந்தார். இதையடுத்து இவர்கள் இருவரும் சட்ட ரீதியாக பிரிந்து விட்டனர். அதன் பின்னர் நடிகை மோனிகா திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து வருகிறார்.

Monica Castelino to enter Life OK's Har Mard Ka Dard

திருமண வாழ்க்கைக்குப் பின்னர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கினார் மோனிகா . ஆனால், திரைப்படங்கள் கை கொடுக்காமல் போக பின்னர் தொலைக்காட்சி பக்கம் திரும்பினார். 2009 ஆம் ஆண்டு ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார். அதன் பின்னர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார்.

-விளம்பரம்-
Image result for Monica Castelino husband

அதன் பின்னர் சோனி கலர்ஸ் போன்ற பல்வேறு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இறுதியாக 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘பார்ட்னர்ஸ்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வந்தார். தற்போது ஒரு சில சீரியல் தொடர்களில் நடித்து வருகிறார் மோனிகா.

Advertisement