சென்னை கேகே நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் முதுநிலை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மாணவிகளுகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜகோபாலன் என்ற அந்த ஆசிரியர், மாணவிகளிடம் அநாகரீகமான கேள்விகளை கேட்டு தர்மசங்கடத்துக்குள்ளாக்கி இருக்கிறார். நாகரீகமாக உடைகளை அணிந்த மாணவிகளை தரக்குறைவாக பேசுவது, பாலியல் நோக்கத்தோடு கேட்ககூடாத கேள்விகளைக் கேட்டபது என்று அந்த ஆசிரியர் செய்து வந்துள்ளார். இதற்கு எல்லாம் மேலாக ஆன் லைன் வகுப்பில் வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு பாடம் நடத்தியுள்ளார்.
https://twitter.com/kankart/status/1397040693697081348
23.5.2021-ல் பள்ளியின் டீனுக்கு முன்னாள் மாணவிகள் தரப்பில் ஒரு பரபரப்பான புகார் மனு அனுப்பப்பட்டிருக்கிறது. எனவே, ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களை பள்ளி நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்திய நிலையில் இந்த சர்ச்சை சமூக வலைதளத்தில் வெடிக்க ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் பாருங்க : கணவர் செய்த கொடுமை, ஓராண்டில் விவாகரத்து - மின்சார கண்ணா பட நடிகையா இது ?
அவர் மீது போஸ்க்கோ உட்பட 5 பிரிவின் கீழ் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இருந்து நடிகர் ஒய் ஜி மகேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றனர். அதே போல இந்த பள்ளி குறித்து பல செய்திகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் ஏ ஆர் ரஹ்மான், தனது பள்ளியில் ஏற்பட்ட அவமானம் பற்றி பேசிய பழைய வீடியோ ஒன்றை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
https://twitter.com/Friend__4U/status/1397012974817058816
அந்த வீடியோவில் பேசும் அவர், நான் பள்ளியில் படிக்கும்போது அடிக்கடி பள்ளிக்கு போகாமல் இருந்திருக்கிறேன் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது பாதியில் வந்துவிட்டேன் என்று கூறிய பின்னர் பள்ளியில் படிக்கும்போது தனக்கு நேர்ந்த அவமானம் குறித்து பேசினார். அதில், உங்கள்பையன கோடம்பாக்கம் தெருவிற்கு கூட்டிச் செல்லுங்கள் அங்கு இருப்பவர்கள் காசு போடுவார்கள். அவரை மீண்டும் ஸ்கூலுக்கு அழைத்து வர வேண்டாம் என்று கூறியதாக ஏ ஆர் ரகுமான் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.
https://twitter.com/Sarax02482830/status/1396885919463002113
ஏஆர் ரஹ்மான் இந்த வீடியோவை பகிர்ந்து வரும் பலர் இது PSBB பள்ளியில் நடைபெற்ற சம்பவம் தான் என்று கூறி வருகின்றனர்.இந்த பள்ளியில் இருந்து தான் ஏ ஆர் ரஹ்மான் பாதியில் வந்துவிட்டார். அதே போல PSBB பள்ளியின் முன்னாள் நிறுவனர் ராஜலக்ஷ்மி பார்த்த சாரதி, ஏர் ஆர் ரஹ்மான் பற்றி ஒரு நிகழ்ச்சி ஒன்றில் வீடியோவில் பேசிய வீடியோவையும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.





